புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-81 / 1.3.1-5
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-80 தொடர்ச்சி)
81. ஐம்பெருங் கண்டமாவின் றமைதரு முலகில் வாழும்
வம்பலர் பயில்வண் டன்ன மக்களெல் லோர்க்கு முன்னர்த்
தம்பெயர் விளங்கப் போந்த தாயகம் இதுவே யென்றால்
இம்பரில் இதனுக் கொன்றீ டிதுவலால் பிறிதொன் றுண்டோ ?
3. மக்கட் படலம்
வேறு
- அத்த மிழகத் தாய்தரும்
முத்த மிழ்த்துறை முற்றிய
மெய்த்த மிழ்ப்புல வேந்தரைப்
புத்து ணர்வுறப் போற்றுவாம்.
- 2. முன் னு மில்லற முற்றியே
தன்ன லங்கள் தவிர்த்துமே
இன்ன லஞ்செய் திசைபெறும்
அன்ன ரே தமி ழந்தணர்.
- 3. அரசி யன்முத லாகிய
துரிசி லாது துலங்கவே
வரிசை யா க வகுத்துரை
பரிசு காணிவர் பண்பரோ.
- 4. ஐவ கைத்துன் பகற்றியே
உய்வ கைத்துயி ருற்றிட
கைவ லத்தினிற் காட்டியவர்
மெய்வ கைத்தமிழ் வேந்தரே.
- 5. நீரி னுந் நன் னிலத்தினும்
கூரு கொண்டு கொடுத்துமே
ஈரி ரும்பொரு ளீட்டுவோர்
மாரி வண்கை வணிகரே.
+++
2. முன்னுதல்-பொருந்தல். 3, துரிசு-குற்றம்,
+++
Leave a Reply