52thamizh

தாய்மொழி என்பது
சிந்தனைக்கோ ஊற்றுக்கண்
சீர்மைக்கோ நாற்றங்கால்
வந்தனைக்கோ சீர்தெய்வம்
வாழ்க்கைக்கோ உயிர்நாடி
முந்திவரும் நல்லறிவு
மூளுகின்ற மெய்யுணர்வு
வந்துலவும் பூந்தென்றல்
வழிகாட்டும் ஒளிவிளக்கு
தாய்மொழி என்பது
தாய்முலைப் பாலதாம்
ஊட்டம்மிகத் தருவதாம்
உரமூட்டும் வரமதாம்
வலிமையைச் சேர்ப்பதாம்
வல்லமை வளர்ப்பதாம்
பிணியெலாம் அகற்றுமாம்
பேரின்பம் நல்குமாம்

நந்தமிழ் வண்டமிழ்
செந்தமிழ் பைந்தமிழ்
இன்தமிழ் பொன்தமிழ்
சொற்றமிழ் நற்றமிழ்
சுகத்தமிழ் அகத்தமிழ்
சங்கத்தமிழ் தங்கத்தமிழ்
பொங்குதமிழ் தங்குதமிழ்
கன்னல்தமிழ் கட்டித்தமிழ்!

kaviko_gnanachelvan01
– கவிக்கோ ஞானச்செல்வன்