பொங்கல் வாழ்த்து - கா.வேழவேந்தன் : pongal vaazhthu_vezhaventhan

இன்பங்கள் கோடி குவித்திட வாழ்த்து கின்றேன்!

உள்ளத்தில் ஆட்சி செய்யும்

உயரிய சுடரே! ஓயா

வெள்ளங்கள் ஓய்ந்த பின்னால்

விழாப் பொங்கல் வந்ததீங்கே!

கள்ளமில் தங்கள் நெஞ்சக்

கனவெலாம் வெல்க! தாங்கள்

கொள்ளைஇன் பங்கள் கோடி

குவித்திட வாழ்த்து கின்றேன்!

வாடாத அன்பால், என்றும்

வற்றாத பற்றால், பேதம்

நாடாத பண்பால் நெஞ்சில்

நங்கூரம் இட்டோர் தாங்கள்!

தேடாமல் தேடிப் பெற்ற

செல்வமே! அறிவே! அன்பே!

நீடூழித் தாங்கள் வாழ

நெஞ்சார வாழ்த்து கின்றேன்!

கவிஞர்  வேழவேந்தன்

கவிஞர் வேழவேந்தன்

 

கவிவேந்தர் கா.வேழவேந்தன்

94444 50167