மரம் தான் காற்றின் தாய்!

-எனது அண்ணன் தம்பிகள்
அக்காத் தம்பிகள் போல அருகாமை
மரங்களும் உறவு மிக்கவை

மரங்களிடம் பேசுங்களேன்
மரங்களும் பேசும்
மரங்களின் மொழி மனத்தின் மொழியாகும்

மனத்தின் மொழி மறந்தோரே
மரங்களை வெட்டுகையில்
வீழ்வது மரங்கள் மட்டுமல்ல நாமும் தானே?

உங்களுக்குத் தெரியுமா
மரங்கள் தான் நமக்கு முன்னோர்

மரம் தான் நமக்குக் கூடு
மரம் தான் மேசை
மரம் தான் ஆடை
மரம் தான் பாடையும்;

நமக்கு முதலெழுத்தும்
கடையெழுத்தும் மரம் தான்

மரம் தான் நமக்கு எல்லாம்
மரம் தான் வீடு
மரம் தான் மேளம்
மரத்தால் தான் நமக்குக் கவிதையும் வாசிக்கக் கிடைக்கிறது,

உயிரென்பது காற்று எனில்
மரம் தான் காற்றின் தாய்

எனவே
மரத்தைக் காப்போம் தோழர்களே
நாளுக்கொரு மரம் நடாவிட்டால் பரவாயில்லை 

வெட்டாதிருங்கள் போதும்!

 வித்தியாசாகர்
பகிரி : 09840502376 ; பேசி: +965 97604989