முருங்கை மரத்து வேதாளம் ! – உருத்திரா இ பரமசிவன்
முருங்கை மரத்து வேதாளம் !
வாழ்க்கை வாழ்வதற்கே !
வாழ்க்கை என்பது
முருங்கை மரத்து வேதாளம் என்று
வெட்டி வெட்டி எறிந்தாலும்
நம் தோள்மீது அது
ஏறிக்கொண்டே தான் இருக்கும்.
வாழ்க்கையை வெறுப்பது என்பது தான்
அந்த வேதாளம்.
வாழ்க்கையை நோக்கி
வரவேற்பு புன்னகை ஒன்றை வீசு
எல்லா வேதாளங்களும்
அணுக முடியாமல்
ஓடியே போய்விடும்.
இப்போது எல்லா வேதாளங்களும்
உன் காலடியில்.
உருத்திரா இ பரமசிவன்
Leave a Reply