தலைப்பு-இலக்குவனார் புகழ்-மா.கந்தையா ; thalaippu_ilakkuvanarpughazh_maa.kandaiyaa

 

மொழிப்போராளி பேரா. இலக்குவனார் புகழ் நின்று நிலைக்கும் !

பருவுடல்    மறைந்தது ;     திருவுயிர்   மறையவில்லை !

 

“ஓரினம் அழிக்க அவ்வினம்பேசும் மொழியைஅழி”

சிற்றினம் சார்ந்த சிற்றறிவு படைத்தோர்

முற்றாக உலகின் முதன்மொழியாம் தமிழைஅழிக்கும்

நற்றாயைக்  கொலைசெயும் நரிக்கூட்டச் செயலை

 

இமிழ்கடல்   ஒலிக்கும்   தமிழ்  மண்ணில்

தமிழ்  காக்க   அமிழ்துயிர்   துறந்தோராயிரம்

உமிழ்கின்ற   எச்சிலை   உறிஞ்சிவாழ்வோர்  பலராயினும்

தமிழெனும்  எச்சத்தைத்  தானெடுத்துஅது   தழைப்பதற்கு

 

வறுமைக் கோலத்தையும் பெருமைக்கோல மாய்க்கொண்டு

தறுகண்  உடைத்த குறுமொழியாம் இந்தியினை

மாறுகை மாறுகால்பட சிறுகத்தறித்தசெயலைநாமின்றே

சிந்தையில் நினைப்போம்; வந்தாரை வாழ்த்தும்

 

பிந்தையோராய் வாழ்ந்தால் முந்தையர்க்கு நாமாற்றும்

சிந்தையைக்  கூறுபோடும் சிறுசெயலென்றே சொல்வோம் !

ஊழிஉள் ளளவும்  ஆழிப்பேரலை ஆர்ப்பரிப்பு போல்

மொழிப்போராளி பேரா. இலக்குவனார் புகழ் நின்று நிலைக்கும் !

ilaiyavanseyaa-kanthaiyaa

          அணுக்கத்   தொண்டன்   மா. கந்தையா  மதுரை