தலைப்பு-யானேபொய், தமிழ்க்காதலன் ; thalaippu_yaanepoy_thzmiahkaathalan

யானே பொய் !

யானே பொய் ! என் பிறப்பும் பொய் !
என் மெய்யும் பொய் ! என் சிந்தையும் பொய் !
என் குடியும் பொய் ! என் இனமும் பொய் !
என் பெயரும் பொய் ! என் சூழும் பொய் !
என் சொந்தமும் பொய் ! என் நண்பரும் பொய் !
என் இளமையும் பொய் !என் நெஞ்சும் பொய் !

என் ஐய!

என் சிந்தாமணி அன்பினால்
நின் செந்தாமரைச் செல்வத் திருவடியையடைந்த
என் செந்தமிழ்க்காதல் மட்டுமே மெய் !

-தமிழ்க்காதலன்