யாரெல்லாம்தமிழரைய்யா, தாமோதரன்கபாலி : thalaippu_yaarellaam_thamizharaiyyaa_thamothanarkabali

யாரெல்லாம் தமிழரையா?

யாரெல்லாம் தமிழரையா? அகமறியச் சொல்வீர்!
ஐயமின்றிச் சுவைத்துணர்வார் ஆரமுதாம் தமிழை!
ஊரெல்லாம் உண்டிடவே உளம்நிறைந்து அழைப்பார்!
ஒண்டமிழில் ஓங்கிடவே ஒருமையிலே திளைப்பார்!
பேரெல்லாம் நற்றமிழில் பெருகிடவே உரைப்பார்!
பிறந்திட்டத் தவப்பயனைப் பெருமையென மகிழ்வார்!
பாரெல்லாம் செந்தமிழைப் பரப்பிடவே திகழ்வார்!
பண்புடனே நம்மையெல்லாம் பார்த்திடவே அருள்வார்!

 

தாமோதரன் கபாலி