zhakaram01

ழகரம் ழகரம் ழகரம்

ழகரம் தமிழின் சிகரம் என்று

உணர வேண்டிய நேரம் (ழகரம்)

தமிழைத் ‘தமிழ்’ என்றே சொல்வீர்

ழகரம் மாற்றித் ‘‘தமில்’’ ‘‘தமிளென்று’’

பேசும் வழக்கம் தவிர்ப்பீர் (ழகரம்)

‘‘கல்’’ எஎறு சொன்னால் கற்றல்

‘‘கள்’’ என்று அதனைச் சொல்வது தவறு

கள் என்றால் போதை நீரே (ழகரம்)

கல்வியைத் தருமிடம் ‘‘பள்ளி’’

‘‘பல்லி’’ என்றால் அச்சொல் குறிக்கும்

சுவரில் ஓடும் பல்லி (ழகரம்)

‘‘அழகு’’ எனும் சொல் அழகு

‘‘அலகு’’ என்று சொல்வது தவறு

பறவையின் மூக்கே அலகு (ழகரம்)

‘‘சோ’’வெனப் பெய்வது ‘மழை’யே

‘‘மலை’’ எனச் சொல்லி மலைக்க வைப்பதில்

மகிழ்ச்சி ஏது? பிழையே (ழகரம்)

‘‘அறம்’’ என்று சொன்னால்

‘‘அரம்’’ என்று ஒலித்தால் அது பொருள் தருமே

இரும்பினை ராவிடும் கருவி (ழகரம்)

‘‘மணம்’’ என்றால் வாசனையாகும்.

‘‘மனம்’’ என்று இருசுழி ‘ன’வுடன் ஒலித்தால்

மனதினைக் குறிக்கும் சொல்லே. (ழகரம்)

S. N. Ezhilarasuகவிஞர் சொ.நா.எழிலரசு.