தலைப்பு-வாயிலுக்குவெளியே : thalaippu_vaayilukkuveliye

என்நாட்டில் என்மொழியி்ல் எல்லாம் செய்வேன்

எவன்தடுப்பான்? முன்வரட்டும் எலிபோல் சாவான்!

என்வீட்டில் நான் பேசி வாழ்வ தற்கே

எச்சட்டம் தடுக்க வரும்? நெருப்பில் வேகும்!

என்அன்னைத் தமிழ்மக்கள் அமைத்தார் கோயில்

எவன்தடுப்பான் தமிழ்உரிமை? கால்கள் போகும்!

என்மக்கள் ஏமாறி வாழ்க்கை தந்தால்

என்மொழியை உதைக்கின்றார் வாழ்க்கை சாகும்!

சமற்கிருதம் எனச்செய்த மொழியை என்றும்

சரியாகப் பேசியவர் எவரு மில்லை

சமற்கிருதப் பிணந் தூக்கிப் பணத்தைஎண்ணிச்

சமயத்தால் மேலேறிச் சாதி செய்தோர்

நமக்குள்ளே வேற்றுமைத் தீ மூட்டிவிட்டார்

நம்மவரே சமற்கிருதம் தூக்க லானார்

சமற்கிருதம் செத்தமொழி செத்த தெல்லாம்

சவந்தானே அதற்கிங்கே என்ன வேலை?

தமிழ்நாட்டில் தமிழ்எதிர்ப்பார் இருப்பா ரானால்

தாளாத பேரிழிவு விடிவ தற்குள்

தமிழ்போற்றும் ஆளாக மாற வேண்டும்!

தமிழ்த்தேனைச் சுவைத்தவர்கள் என்றும் வாழ்வார்!

தமிழ்எதிர்க்கும் தறுதலையாய் வாழ்வா ராயின்

தலையிருக்கும் என்பதற்கோர் உறுதி யில்லை!

தமிழரெல்லாம் இப்போது விழித்துக் கொண்டார்

தமிழ்ப்பகைவர் இனி்யேனும் திருந்திக் கொள்க!

கோயிலுக்குள் நம் தமிழைச் சேர்க்க வொண்ணார்

குறும்பர்கள் எல்லாரும் நாட்டின் எல்லை

வாயிலுக்கு வெளியேதான் ஓட வேண்டும்!

வாழ்வளித்த தமிழ்நாட்டின் வாழ்வொ ழிக்கும்

நாயினுக்கும் கீழான மாக்க ளெல்லாம்

நாட்டுக்கு வெளிப்பக்கம் நழுவிக் கொள்க

கோயிலுக்குள் தமிழ்எதிர்ப்பான் செல்வா னென்றால்

கொதித்தெழுந்தே வெளியேற்றத் துடிப்பீர் இன்றே!

thamizhamallan02

முனைவர் க.தமிழமல்லன்

வெல்லும் தூயதமிழ்

கார்த்திகை 2029 / திசம்பர் 1998

vellum-thooyathamizh-muthirai01