தலைப்பு-விடியல்பரிதி - thalaippu_vidiyal parithi

 உழவத்தமிழா! விடியல் பரிதி நீயே!

 

விசும்பின் துளிபெய்து வியன் நிலம் கீறி

மெய் வருத்தம் உரம் சேர்த்து

கனலும் கதிரொடு தன் புனல் இழைத்து

காய்நெல் அறுத்துக் கழனி வளம் ஆக்கி

ஊஞ்சல் ஞாலம் தன் உயிரீந்து ஆட்டி.

ஓங்கலிடையே தமிழின் ஒளியாய்

உலகு புரக்கும் உழவத்தமிழா! உனை

உறிஞ்சும் தும்பிகள் உலா வந்திடும்

கள்ளம் அறிதி! உள்ளம் தெளிதி!

யானை புக்க புலம் போல நம்

கவளமும் சிதறி வளங்களும் அழிந்து

நிகழ்தரு வல்லிய கொடுமைகள் அகல‌

எழுவாய்!எழுவாய்! எழுதரும் கனலியே

இருள் கிழிக்கும் விடியல் பரிதி

நீயே!நீயே!நீயே தான்!

 -உருத்ரா 

53ruthra