வேண்டா வரன் கொடை!  

 

 

  1. பேயும் இரங்குமாம் பெண்ணென்றால் ! கருப்பிணித்

தாயோ கருவழிப்பாள்  தான்விரும்பி !  – காயிலே

பெண்கருவைத் தாயழித்தால் பின்னெங்கே ஆண்வருக்கம் ?

கண்ணிரண்டும்  போன கதை !

 

  1. ஈழத்தில் இட்டதீ சீதைக்கு ! எழில்மதுரை

சூழத்தீ  இட்டது கண்ணகிக்கு ! – வாழாது

மீண்டும் நகைச்சண்டை !  மேனியில்தீ  தங்கைக்கு !

வேண்டாம் வரதட் சணை !

 

  1. தாலிகட்ட நூறுபவுன் ! தாயாக்க வேறுபவுன் !

கூலிமுதல் தந்தால்மூ கூர்த்தமெனும் – வாலிப

ஆண்மகனும் தாசியைப்போல் ஆசையுள்ள தாசனே !

வேண்டாம் வரதட் சணை !

அறிவியலர் சி . செயபாரதன், கனடா