வேண்டா! வேண்டா! வேண்டா! – இளவல்
வேண்டா! வேண்டா! வேண்டா!
அறிவிலாரிடம் விளக்கி நேரத்தை வீணடிக்க வேண்டா
அன்பிலாரிடம் அன்பு காட் டி வெல்லத் துடிக்க வேண்டா
ஆய்ந்து கண்ட முடிவைச் சொல்லக் கலங்கிட வேண்டா
இனிய முறையில் எழுத அறியாரிடம் இயம்பிட வேண்டா
இல்லை பண்பெனக் கொண்டோரை எதிர்கொள்ள வேண்டா
ஈட்டியைச் சொல்லாகக் கொள்வோரை அணைக்க வேண்டா
உண்மைஎனப் பட்டதை உரைக்கத் தயங்க வேண்டா
உள்ளதைச் சொல்ல எதிர்ப்பிற்கு அஞ்ச வேண்டா
உரையாற்றும் உரிமையைப் பறிப்பவரிடம் உரையாட வேண்டா
உளறுவதே தொழிலாயின் உறவாக்க வேண்டா
கற்றதைப் பிறருக்குக் கற்பிப்பதைக் கைவிட வேண்டா
தூற்றுவோரை உலகம் தூற்றும் ஆதலின் துவள வேண்டா
பொல்லாங்கு நோக்கில் எழுதுநரைப் பொருட்படுத்த வேண்டா
மயங்குவதுபோல் நடிப்பவர்களைத் தெளிவுபடுத்த வேண்டா
மரை கழண்டவர்களுக்கு மறுமொழி அளிக்க வேண்டா
Leave a Reply