வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 5.தீயினம் விலக்கல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 4
இன் தொடர்ச்சி)
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம்
மெய்யறம் (மாணவரியல்)
[வ. உ. சிதம்பரம்(பிள்ளை)
கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.]
5.தீயினம் விலக்கல்
- தீதெலாந் தருவது தீயினத் தொடர்பே.
தீயவர்களின் நட்பு தீமையெல்லாம் தரும்.
- தீயவர் நல்லுயிர் சிதைக்குங் கொடியர்.
தீயவர் என்பவர் நல்லவர்களைக் கொடுமைப்படுத்தும் கொடியவர்கள்.
43.பிறர்பொருள் வவ்வும் பேதை மாக்கள்.
பிறரின் பொருளைக் கவரும் இழிமக்கள்.
- துணைவரல் லாரை யணையுமா வினத்தர்.
தமது துணையன்றிப் பிறரோடும் உறவு கொள்ளும் விலங்கு கூட்டத்தினர்.
- அறிவினை மயக்குவ வருந்து மூடர்.
அறிவினை மயக்கக்கூடிய பொருட்களை உட்கொள்ளும் மூடர்கள்.
- புரைவளர் பொய்ம்மை புகலுந் தீயர்.
குற்றத்தை வளர்க்கும் இயல்புடையதாகிய பொய்யினைப் பேசும் தீயவர்கள்.
- அறனோ பொருளோ வழிக்குங் கயவர்.
அறத்தையும் பொருளையும் அழிக்கும் கீழ்மக்கள்.
- பசுவின் செயலைப் பதியின தென்பர்.
மனிதரின் செயல்களுக்கு இறைவனே காரணம் என்பவர்கள்.
- இத்திறத் தாரோ டிணங்கி நிற்போர்.
இதைப் போன்ற குணங்களை உடையவர்களுடன் நட்பு கொண்டிருப்பவர்கள் ஆகியோர் தீயவர்கள் ஆவர்.
- தீயின மெல்லா நோயென விலக்குக.
தீயவர்களை நோயைப் போல் விலக்க வேண்டும்.
வ.உ.சிதம்பரனார்
Leave a Reply