வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 6. நல்லினஞ் சேர்தல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 5 இன் தொடர்ச்சி)
6. நல்லினஞ் சேர்தல்
- நன்றெலாந் தருவது நல்லினத் தொடர்பே.
நல்லவர்களின் நட்பு நன்மைகளை எல்லாம் தரும்.
- நல்லவர் மெய்ந்நிலை நண்ணி நிற்போர்.
நல்லவர் என்பவர் உண்மையைச் சார்ந்து நிற்பவர்கள்.
- அகத்துற வுற்றுமெய் யறிந்து நிற்போர்.
உண்மையைப் புரிந்து பற்றற்ற உள்ளத்துடன் இருப்பவர்கள்.
- தவமு மொழுக்கமுந் தாங்கி நிற்போர்.
தவத்தையும் நல்லொழுக்கத்தையும் காத்து நிற்பவர்கள் .
- நன்னினைப் புரைசெயன் மன்னி நிற்போர்.
நல்ல நினைப்பு, சொல், செயல் மூன்றிலும் நிலைத்து நிற்பவரே நல்லினத்தார்.
- உலகிய லெல்லா முணர்ந்து நிற்போர்.
உலகத்தின் இயல்பை உணர்ந்து நிற்பவர்கள்.
57.அறனோ பொருளோ வாக்கி நிற்போர்.
அறத்தையும் பொருளையும் படைப்பவர்கள்.
- பசுவினைப் பயன்பதி பயக்கு மென்போர்.
நமது செயல்களின் பயனை நமக்கு அளிப்பது இறைவன் என்று கூறுபவர்கள்.
- இத்திறத் தாரோ டிணங்கி நிற்போர்.
இதைப் போன்ற குணங்களை உடையவர்களுடன் நட்பு கொண்டிருப்பவர்கள் ஆகியோர் தீயவர்கள் ஆவர்.
- தினமு நல்லினந் தெரிந்துசேர்ந் திடுக.
நல்லவர்களைத் தேர்ந்து எடுத்து எப்பொழுதும் அவர்களுடன் இணைந்து இருக்க வேண்டும்.
Leave a Reply