அகரமெய் அறிவாய்!

 

 

க ங ச ஞ சொல்லட்டுமா?

கல்விக் கற்கச் செல்லட்டுமா?

ட ண த ந சொல்லட்டுமா?

தமிழைக் கற்றுக் கொள்ளட்டுமா?

ப ம ய ர சொல்லட்டுமா?

பண்பைப் பெற்று வெல்லட்டுமா?

ல வ ழ ள சொல்லட்டுமா?

வாழ்வில் வெற்றிக் கொள்ளட்டுமா?

ற ன  ற ன சொல்லட்டுமா?

மானாய்த் துள்ளிச் செல்லட்டுமா?

 

  • முனைவர் மு.பொன்னவைக்கோ