எண்ணிறந்த குணத்தோய் நீ!

எண்ணிறந்த குணத்தோய் நீ;
யாவர்க்கு மரியோய் நீ;
உண்ணிறைந்த வருளோய் நீ;
உயர்பார நிறைத்தோய் நீ;
மெய்ப்பொருளை யறிந்தோய் நீ;
மெய்யறமிங் களித்தோய் நீ;
செப்பரிய தவத்தோய் நீ;
சேர்வார்க்குச் சார்வு நீ;

 

  • வீரசோழியம், யாப்பருங்கலம் 11, உரை