DSCI0053.JPG

சடுகுடு ஆட்டம் ஆடு – நம்

                உணர்வின் உயிர்ப்பினைத் தேடு – நீ

சடுகுடு என்றே பாடு – நம்

                மண்ணை மீட்டிடப் பாடு – 2    (சடு)

சடுகுடு பாடி ஆடி – நீ

                சிலிர்த்திடும் வேங்கையாய்ச் சீறு

படபடவென்றே பாடு – நம்

                பகையினைக் களத்தினில் வீழ்த்து – 2        (சடு)

எட்டிச்சென்றே பாடு – நீ

                எதிர்ப்படும் எவரையும் தீண்டு

தொட்டுச் சென்றே விரட்டு – தன்

                தோல்வியை அவரிடம் சுமத்து.   (சடு)

sadu kudu youth

மூச்சைப் பிடித்துப் பாடு – களம்

                முழுவதும் பரவியே ஆடு

வீச்சாய் களத்தினில் ஆடு – முழு

                வீறுடன் தன்னகம் திரும்பு        (சடு)

நம்மிடம் நோக்கிப் பகைவர் – அட

                தாவி வருவதைக் கவனி

தம்மிடம் என்றிதைக் கூறி – அவர்

                பிடிக்க வருவதைக் கவனி.        (சடு)

நம்முடை மண்ணிதை மிதிக்க – நாம்

                நினைவிலும் விட்டிடமாட்டோம்

இம்மியும் பகைவர் நுழைய – இனி

                என்றுமே இடம் தரமாட்டோம்.     (சடு)

நம்மவர் கைகளை இணைத்து – உடன்

                நடுவினில் பகையினைத் துரத்து

விம்மிய தோள்களைக் காட்டி – அவர்

                வீட்டினை நோக்கி விரட்டு.  (சடு)

mukam vetrichezhiyan