natai_payinru_padi

அம்மா, அப்பா என்ற படி,
அங்கும் இங்கும் நடந்த படி,
அழகுத் தமிழில் பாட்டுப் படி,
அம்மா சொல்லித் தந்த படி!

ஆசை முத்தம் கொடுத்த படி,
அப்பா மகிழ்வு கொள்ளும் படி,
அன்னைத் தமிழில் பாட்டுப் படி,
அப்பா கற்றுக் கொடுத்த படி!

அண்ணன் அக்கா சிரிக்கும் படி,
அத்தை மாமா மகிழும் படி,
மழலைத் தமிழில் பாட்டுப் படி,
மனம்போல் குறும்பு செய்த படி!

நடைவண்டி பிடித்து நடந்த படி,
ஙஞண நமன என்ற படி,
நாளும் வளர்வாய் நல்ல படி!
நற்றமிழ்ப் பண்பு காட்டும் படி!

நன்றி : திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி முகநூல்