புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.41-45
(இராவண காவியம்: 1.2.36-40தொடர்ச்சி)
இராவண காவியம்
1. தமிழகக் காண்டம்
2. தமிழகப் படலம்
முல்லை
கொல்லியந் தேனெனுங் குதலை வாய்த்தமிழ்ச்
சொல்லியர் முத்தொடு துனிவு கொண் டொளிர்
பல்லென மலர்ந்தவர் பணியத் தோள்பெறும்
முல்லையம் புறவடர் முல்லை காணுவாம்.
பூவையுங் குயில்களும் பொலங்கை வண்டரும்
பாவிசை பாடமுப் பழமுந் தேனுந்தந்
தேவிசை பெறுங்கடற் றிடையர் முக்குழல்
ஆவின மொருங்குற வருக ணைக்குமால்.
மக்களுக் குணவிட வளைக்கை யாய்ச்சியர்
கக்கமுக் கிடத்தயிர் கடையு மோசைகேட்
டக்கறைக் கொண்டு பார்ப் பணைக்கும் பேடையைக்
கொக்கரக் கோவெனக் கூவுங் கோழியே.
44, முதிரையுஞ் சாமையும் வரகும் மொய்ம்மணிக்
குதிரைவா லியுங்களங் குவித்துக் குன்றெனப்
பொதுவர்கள் பொலியுறப் போரடித்திடும்
அதிர்குரல் கேட்டுழை யஞ்சி யோடுமே.
45.சிறுமறிக் குழாத்தொடு செல்லு மாப்பிணை
குறுகிடக்கலையிளங் குரலிற் கூ வவே
குறுநடைச் சிறார்மறிக் குட்டி யீட்டிடக்
குறுமுயற் றோற்பறை கொட்டு வாரரோ.
மடை-சோ று. ‘அயரும்’ எனச் செய்யுமென்
முற்றுப் பல்லோர் படர்க்கையில் வந்தது.
பின்னும் இவ்வாறு வருவன கொள்க.
- அளி–அன்பு , 41. புறவு-காடு. 42, கடற்று–கசடு.
முக்குழல் – கொன்றை, ஆம்பல், வேய்ங்குழல்.
- கக்கம்-தோளிடுக்கு (கிச்சு) முக்கிட-வருந்த,
பார்ப்பு-குஞ்சு. 44. பொதுவர்-முல்லை நில மக்கள்.
பொலி-தவசக்குலை, உழை-ஒருவகை மான்,
Leave a Reply