புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.46-50

(இராவண காவியம்: 1.2.41-45 தொடர்ச்சி)   இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் முல்லை & பாலை கொன்றையம் புறவிடைக் கொடியின் மின் னரி வான் குன் றுறை யிளையகார் குறுகி மாலையிற் சென்றவர் வரவெதி நள்ளிச் செவ்வியர் முன் றிலி லிறைகொள் முல்லை யோங்குமால்,   பாலை எல்லிய முது வெயி லெறிப்படி நல்வள முல்லையுங் குறிஞ்சியும் முறைமை தப்பியே நல்லியல் பிழந்தற நலிவு செய்திடும் பல்லவங் கருகுவெம் பாலை காணுவாம். வற்றிய விருப்பையும் வதங்கு மோமையும் துற்றிய…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.41-45

(இராவண காவியம்: 1.2.36-40தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் முல்லை கொல்லியந் தேனெனுங் குதலை வாய்த்தமிழ்ச் சொல்லியர் முத்தொடு துனிவு கொண் டொளிர் பல்லென மலர்ந்தவர் பணியத் தோள்பெறும் முல்லையம் புறவடர் முல்லை காணுவாம். பூவையுங் குயில்களும் பொலங்கை வண்டரும் பாவிசை பாடமுப் பழமுந் தேனுந்தந் தேவிசை பெறுங்கடற் றிடையர் முக்குழல் ஆவின மொருங்குற வருக ணைக்குமால். மக்களுக் குணவிட வளைக்கை யாய்ச்சியர் கக்கமுக் கிடத்தயிர் கடையு மோசைகேட் டக்கறைக் கொண்டு பார்ப் பணைக்கும் பேடையைக் கொக்கரக் கோவெனக்…

முல்லை நிலத்தார் உணவு – மா.இராசமாணிக்கம்

முல்லை நிலத்தார் உணவு   தொண்டைநாட்டு முல்லை நிலத்தார் பாலையும் திணையரிசிச் சோற்றையும் உண்டனர். (பெ.ஆ.படை அடி:167-168). முல்லை நிலத்துச் சிற்றூர்களில் இருந்தவர் வரகரிசிச் சோறும் அவரைப்பருப்பும் கலந்து செய்த “கும்மாயம்” எனப்பெயர் பெற்ற உணவை உண்டனர். (பெ.ஆ.படை அடி:192-195). நன்னனது மலைநாட்டு முல்லை நிலத்தார் சிவந்த அவரை விதைகளையும் மூங்கிலரிசியையும் மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லின் அரிசியையும் புளி கரைக்கப்பட்ட உலையிற்பெய்து குழைந்த புளியங்கோலாக்கி உட்கொண்டனர். அடி:434-436. பொன்னை நறுக்கினாற்போன்ற நுண்ணிய ஒரே அளவுடைய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய சோற்றையும்…