இணையவழித் திருத்தப் பயிற்சிக்கு அழைப்பு – சென்னை
அனைவருக்கும் வணக்கம்.
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு (FSFTN), தமிழ் விக்கிபீடியாவின் வேங்கைத் திட்டம் கட்டுரைப்போட்டி 2017 – 2018 இன் பகுதியாக, ஒரு நாள் தொகுதொடர் (Editathon) நிகழ்வு நடத்த தீர்மானித்துள்ளது.
இதன் மூலமாகக் கல்லூரி மாணவர்கள், த,.தொ.(ஐ.டி) ஊழியர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தின் கீழ்த் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைத் தமிழில் உருவாக்கவும், மேம்படுத்தவும், அறிவுசார் படைப்புகள் தன்
மொழியில் இருக்க வேண்டியதன் முதன்மைத்துவத்தையும் சார்ந்து விவாதங்கள், உரைகள் நிகழ்த்தவும் முயல்கிறது.
இந்த முயற்சிக்கு ஆதரவு அளித்துத், தங்கள் கருத்துகளை வழங்கி உதவ வேண்டுகிறோம். நிகழ்வு விவரங்கள்
பின்வருமாறு, அனைவரையும் பங்கேற்க அழைக்கிறோம்.
இடம் :
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு,
கடை எண் 5/350, பழைய மகாபலிபுரம் சாலை, நேரு நகர், துரைப்பாக்கம்,
[துரைப்பாக்கம் சிடிஎசு(CTS) அருகில்,]
சென்னை 600 097
நாள்\ சித்திரை 16, 2039 / 29.4.2018
நேரம் – காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை
பதிவிற்கு- https://fsftn.typeform.com/to/E7sAyc
நன்றி
பாலாசி இரவிச்சந்திரன்
https://fsftn.org/
https://discuss.fsftn.org/
https://fsftn.org/blog/contact/
https://mailman.fsftn.org/mailman/listinfo/mailinglist_fsftn.org
https://mailman.fsftn.org/mailman/options/mailinglist_fsftn.org
Leave a Reply