அன்பார்ந்த தோழர்களே ,

உலகம் கண்டிராத இனப்படுகொலை அவலம் நம் ஈழத்தமிழ் உறவுகளுக்கு திட்டமிட்டு இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க சக்திகளால் நிகழ்த்தப்பட்டு 6 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் “இது,திட்டமிட்ட இனப்படுகொலை!” என்பதை மறைக்கும் சதியை முறியடிக்க வேண்டும். நீதி கேட்கும் நெடும் பயணத்தில்,செறிவான ஆவணப்படம் மூலம் உலகின் மனச்சான்றை உலுக்கும் வகையில்

இயக்குநர்.வ.கவுதமன் அவர்களின்

“இது, இனப்படுகொலையா இல்லையா?” எனும் நெருப்புப் படைப்பு

சித்திரை 30, 2046, மே 13 ,2015 அன்று மாலை 5.00 மணியளவில்

(ஆர்.கே.வி.படநிலையம், வடபழனி, சென்னை) வெளியாக உள்ளது.

தொடர்ந்து தன்னுடைய பல்வேறு புரட்சிப் படைப்புகளால் தமிழினத்திற்க்கு ஆற்றி வரும் ஒப்படைப்பு மிக்க பொதுத் தொண்டில் நம்மையும் இணைத்து கொள்வோம்!

அனைத்து அரசியல் இயக்கத் தலைவர்களும்,அனைத்து மாணவர் இயக்கச் சார்பாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

ஒற்றுமை மலரட்டும் ! நீதி வெல்லட்டும் !

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!” 

azhai_inapadukolai_aavanapadam