இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் பன்றிக்காய்ச்சல் . . . . . .
தேவதானப்பட்டி ஓடைகளில்
இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் பன்றிக்காய்ச்சல் பரவும் கண்டம்(அபாயம்)
தேவதானப்பட்டி ஓடைகளில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் பன்றிக்காய்ச்சல் பரவும் கண்டம்(அபாயம்) ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி ஓடைகளைக்கவர்ந்து ஆட்டு இறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, பன்றிஇறைச்சி ஆகிய கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கள்ளத்தனமாகக் கவர்ந்து கட்டப்பட்ட கடைகளில் இருந்து வெட்டப்படும் ஆடு, கோழி, பன்றி ஆகியவற்றின் கழிவுகளை ஓடைகளில் கொட்டி விடுகின்றனர். மேலும் தெற்குத்தெருவிலிருந்து புல்லக்காபட்டி வரையிலும் பன்றி இறைச்சியின் கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் கெடுநாற்றம் வீசிக் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள பொதுமக்களையும், வணிகர்களையும் முகம் சுளிக்க வைக்கிறது.
மேலும் தேவதானப்பட்டிப் பேரூராட்சி உறுப்பினர்களே பன்றிகளை வளர்த்து வருவதால் பேரூராட்சி நிருவாகத்தால் நடவடிக்கை எடுக்கமுடியில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேரூராட்சி சார்பில் காவல்துறையிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. எனவே குடியிருப்புப் பகுதிகளில் பன்றிகளை மேயவிடுவோர் மீதும், பொதுமக்களுக்கு ஊறுவிளைவிக்கும் வண்ணமாக இறைச்சிக்கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீதும் பேரூராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
Leave a Reply