இலக்குவனார் வணங்கும் கடவுள்
இலக்குவனார் வணங்கும் கடவுள்
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வானாளத் தருவரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்பேம்அல்லேம்
மா(த்) தமிழுக்கே அன்பர் அல்லராகில்!
எங்குமுள இடமெலாம் சுற்றிஓடி
இரந்துண்ணும் இழிவாழ்க்கை உடைய ரேனும்
தங்குபுகழ்ச் செந்தமிழ்க்கோர் அன்பராகில்
அவர்கண்டீர் யாம்வணங்கும் கடவுளாரே!
– பேராசிரியர் இலக்குவனார்!
– புதிய பார்வை (நவ.16-30, 2014) பக்கம் 44
தரவு: பாபு கண்ணன்
Leave a Reply