தமிழ் உரிமைப் போராளி இலக்குவனார் – கவிஞர் இன்குலாபு

தமிழ் உரிமைப் போராளி இலக்குவனார் – கவிஞர் இன்குலாபு தமிழை இனிமை என்றனர் பாவலர்கள் தமிழைப் புகழ் என்றனர் புலவர்கள் தமிழைத் தன்மானம் என்றவர் இலக்குவனார் ! தமிழ் விழிப்புற்றது பாரதியால் தமிழ் எழுச்சி பெற்றது பாரதிதாசனால் தமிழ் போராடியது இலக்குவனாரால் எந்த ஓர் அரசமஞ்சத்திலும் ஏறத் தகுந்தவர் எந்த ஓர் அரசும் சாமரம் வீசுதற்குரியவர் இருந்தும் எல்லா அரசுகளும் இலக்குவனார்க்குச் சிறையையே திறந்தன ! எல்லா அரசுகளும் இவர்மீது உறைவாளையே உருவின ! நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று தொன்று தமிழருக்கு…

இலக்குவனாரின் புதிய பார்வை – இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனாரின் புதிய பார்வை  இலக்குவனார் திருவள்ளுவன்   தமிழிலக்கிய இலக்கண நூல்களைப் புரிந்து கொள்ளப் பெரும் உதவியாகஇருப்பன உரைகளே ஆகும். இலக்கிய, இலக்கணக் கடலின் கலங்கரை விளக்கங்களாக உரையாசிரியர்கள் திகழ்கின்றனர். உரையாசிரியர் களால் பல மூல நூல்களும் நமக்குக்கிட்டும் வாய்ப்பு அமைந்துள்ளன. நமக்கு வழிகாட்டும் உரையாசிரியர்களுள்இக்காலத்தில் போற்றத் தகுந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர்முனைவர் சி.இலக்குவனார்.    உரையாசிரியர்கள் இலக்கிய விளக்கம்நமக்குப் பயன்தருகின்றன என்பது ஒரு பக்கம். மறுபுறமோ,  அவர்கள், தம் காலச்சூழலுக்கேற்ற உரை விளக்கம் அளித்தும் தம் விருப்பு வெறுப்புக்கேற்பமூலநூல்களை அணுகியும் பொருந்தா உரைகளும் அளித்துள்ளனர்…

இலக்குவனார் குறள்நெறி நாளிதழ் தொடங்கியதன் காரணம்

 குறள்நெறி இதழ்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் திங்கள் இருமுறைதான் வந்தன. தமிழன்பர்கள் வார இதழாக மாற்றக் கூடாதா? பக்கங்களைக் கூட்டக்கூடாதா என்றெல்லாம் வேண்டினர். வாரஇதழாக மாற்றுவதைவிட நாளிதழாக மாற்றுவதே தக்க பணியாகும் எனப் பேராசிரியர் கருதினார். இதழ்கள் வாயிலாக மொழிக்கொலை நடைபெறுவதால் அதைத் தடுத்து நிறுத்தத் தாமே முன்முறையாக நன்முறையாக நற்றமிழில் நாளிதழ் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து குறள்நெறி நாளிதழும் தொடங்கினார். இதுகுறித்த நாளிதழ் ஆசிரிய உரை வருமாறு: “நற்றமிழில் உரையாட வேண்டும், எழுத வேண்டும் என்று கருதுபவர்களால்கூட நற்றமிழைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை…

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி – முனைவர் க.இராமசாமி

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி     தமிழினத் தொன்மையையும் தனித்தன்மை யையும்நிறுவும் வகையில் நமக்குக் கிட்டியுள்ள சான்றுகள் மிகச் சிலவே. அவற்றுள்தலையாயது ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம். மொழி, இலக்கியம், வாழ்வியல்மூன்றனுக்கும் இலக்கணம் கூறும் பண்பாட்டுப் பெட்டகம். இதுபோன்றதோர் இலக்கணநூல் உலகில் எந்த மொழியிலும் தோன்றியது இல்லை. தமிழிலும் கூட இதற்குநிகரானதோர் இலக்கண நூல் இதுவரை உருவாகவில்லை. தொல்காப்பியத்திற்குமுன்னர்ப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இலக்கண இலக்கிய வளம் மிக்கதாய் தமிழ்இருந்துவந்திருக்கவேண்டும் என்பதற்கு இதுவே நற்சான்றாய்த் திகழ்கிறது.   தமிழால் வாழ்ந்தோர் பலர். தமிழுக்காகவாழ்ந்தோர் மிகச்சிலர். அம் மிகச்…

இலக்குவனார் வணங்கும் கடவுள்

இலக்குவனார் வணங்கும் கடவுள்   சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வானாளத் தருவரேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்பேம்அல்லேம் மா(த்) தமிழுக்கே அன்பர் அல்லராகில்! எங்குமுள இடமெலாம் சுற்றிஓடி இரந்துண்ணும் இழிவாழ்க்கை உடைய ரேனும் தங்குபுகழ்ச் செந்தமிழ்க்கோர் அன்பராகில் அவர்கண்டீர் யாம்வணங்கும் கடவுளாரே! – பேராசிரியர் இலக்குவனார்! – புதிய பார்வை (நவ.16-30, 2014) பக்கம் 44 தரவு: பாபு கண்ணன்  

தமிழே இலக்குவனாரின் மூச்சு!

  தமிழே இலக்குவனாரின் மூச்சு!     “பேராசிரியர் இலக்குவனார் கூர்த்த அறிவு படைத்தவர்; முறையாக நூல்களைக் கற்றவர்; சிறந்த ஆராய்ச்சியாளர்; சிந்தனையாளர்; கருத்துக் களஞ்சியம் என்றால் மிகையாகாது. தமிழுக்காக எத்தகைய தியாகமும் அவர் செய்யத் தயங்காதவர். சிறந்த தமிழ்க் காவலர். அவர் குறிக்கோள் கொள்கை எல்லாம் தமிழ் வளர்ச்சியே! தமிழே! ஆயுள் முழுவதுமே சிறப்பாகத் தொண்டாற்றியவர்.’’ _ அண்ணலார் பு.அ. சுப்பிரமணியன் – புதிய பார்வை (நவ.16-30, 2014) பக்கம்44 தரவு : பாபு கண்ணன்

“தமிழ் மாநாடுகளில் தமிழ்ப் பகைவர்க்கே முதன்மை” : வருந்திய இலக்குவனார்

“தமிழ் மாநாடுகளில் தமிழ்ப் பகைவர்க்கே முதன்மை” : வருந்திய இலக்குவனார்   பேராசிரியரின் உழைப்பால் மக்களிடையே ஏற்பட்ட தமிழுணர்வை அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய தி.மு.க. ஆட்சியிலும் இதே அவலம்தான் தொடர்ந்தது. 1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டிலும் “தமிழ்மொழிப்பற்றும் தாங்கிய புலமையும் இல்லோரெல்லாம் இனிதிடம் பெற்றனர். எம் போன்றோரை எள்ளியே தள்ளினர்” எனப் பேராசிரியர் வருந்தும் அளவிற்குத் தமிழ்ப்பகைவர்க்கு முதன்மை அளிக்கப்பட்டது. பகைவரையும் நட்பாக்க வேண்டும் என உணர்ந்தவர்கள் அன்பர்களின் சிறப்பைப் புறக்கணிக்கும் போக்கு இருந்தது. இருப்பினும் கட்டணம் செலுத்திப் பேராளராகப் பங்கேற்றுத்…

சாதி, சமயமற்ற நாட்டை விரும்பிய பேராசிரியர் இலக்குவனார்!

சாதி, சமயமற்ற நாட்டை விரும்பிய பேராசிரியர் இலக்குவனார்! சமய விடுமுறைகளும் பிராமணியச் செல்வாக்கின் அடையாளமே எனக்கூறி, ஒரேசமயம், ஒரேமொழி, ஒரே இனம்முதலான ஒற்றையாட்சிக்கு எதிர்ப்பை மக்களிடையே உருவாக்கினார். “பரதகண்ட முழுவதும் ஒரேஆட்சி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் எனக் கொள்ள வைத்துப் பல மொழிகளையும், இனங்களையும், இந்து ஆட்சி எனப் பாகிசுதானுக்குப் போட்டியாக ஒன்றை உருவாக்க எண்ணுகின்றனரோ என ஐயுற வேண்டியுள்ளது. இந்துமதம் என்பது பிராமணீயம் என்பதும் அதனைக் காக்க எந்த நிலையில் உள்ள பிராமணரும் பின்வாங்கார் என்பதும் என்றும் நினைவில்கொள்ள…

பேராசிரியர் நமக்கு வழங்கும் நெறியுரைகள்

பேராசிரியர் நமக்கு வழங்கும் நெறியுரைகள் நாம் பேராசிரியர்போல் போராளியாகத் திகழாவிட்டாலும் உரிமையுள்ள தமிழ் மாந்தராகவாவது வாழ வேண்டுமல்லவா? அதற்குப் பேராசிரியரின் பின்வரும் அறிவுரை களை அவர் நமக்கு இட்ட கட்டளைகளாகக் கொண்டு ஒழுக வேண்டும்: மொழியைக்காத்தவர்விழியைக்காத்தவர்! மொழியைச்சிதைத்தவர்விழியைச்சிதைத்தவர்! மொழிக்கும்விழிக்கும்வேற்றுமைஇல்லை! மொழியே விழி விழியே மொழி என்று கிளர்ச்சி கொள்ளுங்கள். தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று அறைகூவுங்கள். தமிழ்வாழ்க!தமிழ்வாழ்க! தமிழ்ஓங்குக!தமிழ்உயர்க! என்றுவாழ்த்துங்கள் தமிழில்எழுதுக!தமிழில்பேசுக! தமிழில்பெயரிடுக!தமிழில்பயில்க! என்றுமுழங்குங்கள். மொழிவாழ்வுக்குமுயற்சிசெய்யுங்கள்… உங்கள்முயற்சிவாழ்க! தமிழ்வாழ்ந்தால்தமிழர்வாழ்வர்! தமிழர்வாழ்ந்தால்தமிழ்நாடுவாழும்! தமிழ்வாழ்வேதமிழர்வாழ்வு! (தரவு : புலவர்மணி இரா.இளங்குமரன்: பக்கம் 37: செந்தமிழ்க்காவலர்சி.இலக்குவனார்)