தலைப்பு,பிரிதானியாவில்,கனவஈர்ப்பு :thalaippu_ ilangaiyil_nallaatchiyaa_poarattam.

இலங்கையில் நல்லாட்சியா ?

பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் !

நல்லாட்சி என்ற மாயைக்குள் இலங்கைத்தீவில் தொடர்ந்தும் நடந்தேறும் மனித உரிமைமீறல்களை அம்பலப்படுத்தி  இலண்டனில்  கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

தொடர்கின்ற கைதுகளைக் கண்டித்தும், வெள்ளைஊர்தி(வான்) கடத்தலுக்கு எதிராகவும், புலம்பெயர் தேசங்களில் இருக்கின்றவர்களைத் திருப்ப அனுப்ப வேண்டா எனத் தெரிவித்தும் இக்கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறுகின்றது.

பிரித்தானிய அரசிற்கு இக் கோரிக்கைகளை  முன் வைக்கும் அதேநேரம், பிரித்தானிய அரசாங்கம்  சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது

எதிர்வரும் சித்திரை 09, 2047 / 22.05.2016 ஞாயிற்றுக்கிழமை,

நண்பகல் 01:00 தொடக்கம் மாலை 04:00 வரை 

பிரித்தானியத் தலைமையர்(பிரதமர்) வாயில் தளத்தின் முன்

 (NO 10, DOWNING STREET, WEST-MINISTER, LONDON) 

ஒருங்கு செய்யப்பட்டுள்ளது.

நாதம் ஊடகச் சேவை