இலங்கையில் நீதி நிலை நிறுத்தப்படும் – கனடா உறுதி!
மனித உரிமை, சட்டம் ஒழுங்கு, சமயஉரிமை போன்றவற்றில் மிக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள கனடா, இத்தகைய நிலைப்பாட்டில் இலங்கை அரசு போதிய பற்றுறுதியைக் காட்டவில்லை என்பதைக் காரணம் காட்டி, அண்மையில் இடம்பெற்ற பொதுவள மாநாட்டில் கனடியத் தலைமையாளர் கலந்து கொள்வதில்லை என்ற முடிவை எடுத்திருந்தது. இதற்கிணங்க, மனிதநேயம் மிக்க, கனடியத் தலைமையாளர் இசுடீபன் ஆர்பர் இனப்படுகொலை நாட்டில் கொலையாளிக்குத் தலைமைப் பொறுப்பைக் கொடுக்கும் பொதுவளஆய மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே!
இருப்பினும், கனடாவில் சார்பில் கனடிய வெளியுறவு அமைச்சின் நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒபரோய் அவர்களும், பிராம்டன்-இசுபிரிங்டேல் நாடாளுமன்ற உறுப்பினர் பாம் கில் அவர்களும், இலங்கை சென்று திரும்பினர். இவ்விருவரையும் தமிழ்க் குமுகாயத்தின் சார்பாளர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர்.
“மக்கள்நேய விதிகளுக்கு முரணாக நடந்து கொள்வதையும், போரின் போதும் போருக்குப் பின்னரும் அங்கு மிக மோசமாக இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு இதுவரை பொறுப்புக்கூற சிறீலங்கா அரசு மறுப்பதையும், ஏற்றுக்கொள்ள முடியாது” என்று இவர்கள் தெரிவித்தனர். மேலும், இலங்கையில் நீதி நிலைநிறுத்தப்படும் என்று உறுதியளித்ததுடன், இலங்கையில் இடம்பெற்ற அநீதிகளுக்கு நயன்மை(நியாயம்)வழங்க வேண்டுவதுடன், அதற்குக் காரணமானவர்களை பொறுப்புக் கூற வைப்பதிலும் கனடா தனது பங்களிப்பை உறுதியுடன் தொடரும் என்றும் இவர்கள் தெரிவித்தனர்.
.
Leave a Reply