மாவீரர்நாள், இலண்டன்18 ; maaveerarnaal-london18

இலண்டன்  பல்கலைக்கழகக் கல்லூரியில் மாவீரர் வார நிகழ்வு

தமிழ் இளையோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவீரர் வார நிகழ்வுகள் பல நாட்டின் பல்கலைக்கழகங்களில் நடந்தேறிவருகின்றன. அதேபோல இலண்டன்  பல்கலைக்கழகக் கல்லூரியில்(UCL)  புதன்கிழமை மாலை தாயக மண்மீட்புப் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரித்தானிய இளையோர் அமைப்பும் இலண்டன் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து முன்னெடுத்தனர்.  இந்த நிகழ்வில் ‘ஒருதாள்’ (oru paper.com கோபி, உயிர் பிழைத்தோர் கதைகள் பிரம்மி  செகன் , சத்தியசீலன், தமிழ்வாணி  ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மாணவர்கள் எப்படி  தொடக்கக்காலத்தில் ஈழப்போரினில் ஈடுபட்டார்கள் என்ற விளக்கங்களை சத்தியசீலன் விளக்கினார்.

பிரம்மி  செகன் முள்ளிவாய்க்காலில் தனது தந்தையரின்  பட்டறிவுகளையும்  அவர்கள்  துய்த்த துயரங்களையும் பகிர்ந்துகொண்டார், தமிழ்வாணியும் தனது துயரங்களையும்  படையினரின்  இனப்படுகொலையின் உச்சகட்டப் போரினைப்பற்றியும் மாணவர்களுக்கு விளக்கினார்.

‘ஒருதாள்’ கோபி, பன்னாட்டு அரசியல், தமிழீழ புவிசார் அரசியல் நிலைமைஆகியனபற்றி எடுத்துரைத்தார். அத்தோடு இந் நிகழ்வில் தமிழர்களுக்கு எதிரான பிரித்தானியாவின் போர் நூல் எழுத்தாளர்  பில் மில்லர்(Phil Miller) உரையாற்றினார்.

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

 TYOUK media@tyouk.org