உணர்ச்சியற்ற மத்திய அரசால் இலங்கைப் படை அட்டூழியம்: முதல்வர் காட்டம்
மீனவர்கள் மீட்பு தொடர்பாகத் தமிழக முதல்வர் இந்தியத்தலைமையாளருக்கு மீண்டும் மடல் எழுதி உள்ளார்.
” இலங்கைக் கடற்படையினரின், சட்ட மீறல் நடவடிக்கையால், இலங்கைச் சிறையில் வாடும், தமிழக மீனவர்களின் எண்ணிக்கை, பெருகியபடி உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க, மத்திய அரசு, இலங்கைக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். அத்துடன், தூதரக அளவில், பேச்சு நடந்தி, இச்சிக்கலுக்கு நிலையான தீர்வு காண வேண்டும். ஆனால், மத்திய அரசு, தொடர்ந்து கண்டு கொள்ளாமல் இருப்பது, தமிழக மீனவர்களிடம், கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில், 21அன்று சிறைபிடிக்கப்பட்ட, 20 மீனவர்களுடன் சேர்த்து, 80 பேர், இலங்கைச் சிறையில் வாடுகின்றனர். அவர்களையும், அவர்களுக்குச் சொந்தமான, 47 படகுகளையும் விடுவிக்க, தனிப்பட்ட முறையில், நடவடிக்கை எடுக்க வேண்டும். “
இவ்வாறு, முதல்வர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பொதுநலஆய மாநாட்டிற்குச் சென்றிருந்த பொழுது இது குறித்துப் பேசா இந்திய அரசு இனியும் திருந்தப் போவதில்லை. எனவே, முதல்வர் வேறு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்
Leave a Reply