உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா:ஆய்வுச் சுருக்க நாள் நீட்டிப்பு
உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா
கல்வியியல், தொழில் நுட்பப் பிரிவு, மலேசியா
உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம்
ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017
ஆகிய நாளில் நடைபெற உள்ள
உலகத்தமிழ் இணைய மாநாட்டிற்கான
ஆய்வுச் சுருக்கம் அனுப்பும்
இறுதி நாள் ஆனி 13, 2048 /30 சூன் 30, 2017 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளோர் விரைவாக அனுப்ப வேண்டப்படுகின்றனர்.
கட்டுரை வரப் பெற்ற 3 நாளில் ஏற்பும் அறிவிக்கப்பெறும்.
முழுமையான கட்டுரை வர வேண்டிய நாள் :
ஆனி 31, 2048 / சூலை 15, 2017 மாலைக்குள்ளாக
மாநாட்டிற்கான ஆய்வுக் கட்டுரைகள் கீழ் வரும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் படைத்து அனுப்பும்படி நினைவூட்டப்படுகின்றனர்.
- இயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச்சொல்லாளர் (சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கணத்திருத்தி முதலியன)
எழுத்துப் பகுப்பாய்வு – Text Analytics/Mining (ex: word frequency, paraphrases, automatic textual encoding), உணர்ச்சிப் பகுபாய்வு- Sentiment Analysis, ஆவண வகைப்படுத்தல் – Document Classification, உருப்பொருள் பிரித்தெடுத்தல் – Entity Extraction
- இயந்திர மொழிபெயர்ப்பு,தமிழ்ப் பேச்சுப் பகுப்பாய்வு, எழுத்துரை-பேச்சுரை மாற்றிகள்,தேடுபொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், மின்னகராதி அமைத்தல் முதலியன.
- மொழித்தொகுப்பு ஆய்வு (Corpus linguistics)
- ஒளியெழுத்துணரி, கையெழுத்துணரி.
- கையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்துதலும், இக்கருவிகளில் பயன்படுத்தத்தேவையான தமிழ்க்கணினி குறுஞ்செயலிகள் (முக்கியமாக ஆப்பிள், ஆண்டிராய்டு, விண்டோசு)
- திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கம்.
- தமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிப்பீடியா, சமூக இணையதளங்கள், தமிழ் மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணினிவழி தமிழ்நூல்கள் ஆய்வு, கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள், தமிழ் மின்வணிகம் மற்றும் பிற தமிழ்ப் பயன்பாட்டு நோக்குடன் தயாரிக்கப்பட்ட கணினி மென்பொருள்கள்.
- எண்ணிம ஆவணப் பாதுகாப்பு, எண்ணிமத்திரட்டுகள்
- தொடர்புறு தரவுகள் (இணைப்புத் தரவு)- Linked Data, தமிழில் பொருளுணர் வலை(semantic web); தரவுக் காட்சிப்படுத்தல் – Data Visualization
- கற்றல் மேலாண்மை அமைப்புகள்(Learning Managements Systems),மெய்நிகர் கல்விச்சூழல்(Virtual Learning)
- எண்ணிமப் பாதுகாப்பு – Digital Preservation, எண்ணிம நூலகம் – Digital Library, எண்ணிம ஆவணகம் – Digital Archive, இணைப்புத் தரவு – Linked Data,மெய்ப்பொருளியம் –Ontology
கணித்தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்க அழைக்கப்பெறுகின்றனர்.
Leave a Reply