ஏழேகால்இலட்ச உரூபாய்ப் பரிசு தரப்போகும் ஒளிப்படப் போட்டி!
ஏழேகால்இலட்ச உரூபாய்ப் பரிசு தரப்போகும் ஒளிப்படப் போட்டி!
கோவை இலட்சுமி இயந்திரப்பணிகள் (Lakshmi Machine Works Limited/LMW) நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் மறைந்த முனைவர் செயவர்த்தனவேலு நினைவாக கடந்த ஐந்தாண்டுகளாக நடத்தப்பட்டுவரும் தே.செ (D.J.) நினைவு ஒளிப்படப்போட்டி ஆறாவது முறையாக இப்போது நடத்தப்படுகிறது.
போட்டிக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.
எந்த அகவையினரும் கலந்து கொள்ளலாம்.
யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
படங்கள் இந்தியாவில் எடுத்ததாக இருக்கவேண்டும்.
அனுப்பும் படத்திற்குக் கட்டாயமாகத் தலைப்பு கொடுக்கப்பட வேண்டும்.
படங்களை இணையவழியில்தான் அனுப்பவேண்டும்.
இயற்கை என்ற தலைப்பின் கீழ்ப் படங்கள் அமைந்திருக்கவேண்டும் என்பது முதலான பல விதிகள் உண்டு. இந்த விதிகளைத் தெரிந்து கொள்ளவும், படத்தை எங்கு எப்படி அனுப்பவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவும் www.djmpc.in என்ற வலைத்தளத்திற்குச் சென்று முழுமையாக அறிந்து கொள்க.
படங்களை வருகின்ற சூன் மாதம் 30 ஆம் நாளுக்குள் அனுப்பவேண்டும்.
தேர்வு செய்யப்படும் படங்களுக்கு முதல் பரிசு 3 நூறாயிரமும் இரண்டாவது பரிசு 2.25 நூறாயிரமும் மூன்றாவது பரிசு 1.5 நூறாயிரமும் மற்றும் ஐந்து பேருக்கு ஆறுதல் பரிசாக ஒவ்வொருவருக்கும் பத்தாயிரமும் என மொத்தம் ஏழேகால்இலட்ச உரூபாய்ப் பரிசாகப் பணம் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் நடைபெறும் ஒளிப்படப் போட்டிகளிலேயே பரிசுகளை அதிகப்படியாக தரும் போட்டி இதுதான் ஆகவே நீங்கள் உங்கள் சிறந்த ஒளிப்படத்தை அனுப்புவதன் மூலம் பரிசும், பாராட்டும் பெற வாழ்த்துகள்.
நன்றி : முருகராசு,
http://www.dinamalar.com/news_detail.asp?id=1500762
தினமலர்
Leave a Reply