மேனாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்!

மேனாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்! மேனாள் அமைச்சரும் அமமுக அமைப்புச் செயலாளருமான பரிதி இளம்வழுதி  இன்று நலக்குறைவால் காலமானார். தி.மு.க.வில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் செயலாகவும் மேலவை உறுப்பினராகவும் இருந்த  இளம் வழுதியின் மகன்தான் பரிதி(இளம்வழுதி). அறிவுக்கொடி என்னும் இதழின் வெளியீட்டாளராகவும் ஆசிரியராகவும் சிறிது காலம் இதழ்ப்பணியிலும் ஈடுபட்டார். இவரது சொல் வன்மையும் நாநயமும் இவரைத் தி.மு.க.வின் சிறப்புப் பேச்சாளர்களுள் ஒருவராக மாற்றியது. மக்களைச் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்க மட்டுமல்லாமல்  உருக்கத்தில் மூழ்கும் வண்ணமும் பேசும் திறன் மிக்கவர். தன் 25 ஆம்…

மொழிக்கொலைப் போலிக் கவிஞர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்  – இலக்குவனார் திருவள்ளுவன்

மொழிக்கொலைப் போலிக் கவிஞர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்  ஒரு மொழியின் தூய்மையையும் தனித்தன்மையையும் சிதைத்தும் அயற்சொல் கலந்தும் பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் மொழி அழிகின்றது. ஒரு மொழி அழியும் பொழுது அம்மொழி பேசும் இனமும் அழிகின்றது. எனவே மொழிக் கொலை புரியும் படைப்பாளிகள், பேச்சாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இங்கே தலைப்பில் கவிஞர்கள் எனக் குறிப்பிட்டாலும் மொழிக்கொலைகாரர்கள் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்களே!  கவிஞர்களைக் குறிப்பிட்டதன் காரணம்  ‘சர்க்கார்’ என்னும் திரைப்படப் பாடல்களில் வேண்டுமென்றே மொழிக்கொலை புரிந்த கவிஞர் ஒருவரைக் குறிப்பிட்டுத்தான். ‘சிமிட்டாங்காரன்’ என்னும் தலைப்பில் சொல்லப்படும்…

உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா மாநாடு குறித்த இணையவழி உரையாடல்

உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா மாநாடு குறித்த இணையவழி உரையாடல் நாள் : ஆடி 21, 2048 ஞாயிறு  ஆக.06, 2017 மாலை 6.00 – 7.30 இடம் : வெள்ளை மாளிகை, மணவை முசுதபா நினைவகம் ஏஈ 103. 6 ஆவது தெரு, பத்தாவது முதன்மைச்சாலை, அண்ணாநகர் மேற்கு, சென்னை 600 040 நேரலை/ உரையாடலில் பங்கேற்க இணைய  முகவரி : https://www.fb.com/DrSemmal பதிவான காணொளிகளைக் காண : https://www.youtube.com/user/naalayatamil இணைய உரையாடலில் பங்கேற்க அழைக்கிறோம்! http://www.wtic.my/

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙோ) – இலக்குவனார் திருவள்ளுவன்

 (தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ) – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙோ)   குறள்நெறி இதழ்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் திங்கள் இருமுறைதான் வந்தன. தமிழன்பர்கள் “வார இதழாக மாற்றக்கூடாதா? பக்கங்களைக் கூட்டக்கூடாதா” என்றெல்லாம் வேண்டினர். வார இதழாக மாற்றுவதை விட நாளிதழாக மாற்றுவதே தக்க பணியாகும் எனப் பேராசிரியர் இலக்குவனார் கருதினார். இதழ்கள் வாயிலாக மொழிக்கொலை நடைபெறுவதால் அதைத் தடுத்து நிறுத்தத் தாமே முன்முறையாக நன்முறையாக நற்றமிழில் நாளிதழ் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து குறள்நெறி நாளிதழும் தொடங்கினார். இது குறித்த நாளிதழ்…

குளங்களின் பாதுகாப்பை உணர்த்தும் ‘நடுகல் சிலை’

குளங்களின் பாதுகாப்பை உணர்த்தும் ‘நடுகல் சிலை‘  நீர் நிலைகளைப் பாதுகாத்தவர்களுக்கு, நடுகல் சிலை வைத்து அவர்களை வழிபாட்டுக்கு உரியவர்களாக மாற்றி முன்னோர்கள் முதன்மை அளித்துள்ளனர்.   மன்னர்கள், பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில்,  பயிர் நிலங்களின் பரப்பை அதிகரிக்க, குளங்கள், தடுப்பணைகள் உருவாக்குவது  முதன்மைப் பணியாக இருந்துள்ளது. நீர் நிலைகளைப் பாதுகாக்க, அவர்கள் அளித்த  முதன்மை, நீர் வழித்தடங்களையும் நீர் நிலைகளையும் அழித்து விட்டு, வறட்சியில் வாடிக்கொண்டிருக்கும் நமக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.    மேடான தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிக்கு, வாய்க்கால் வெட்டித் தண்ணீர் கொண்டு வந்து,…

தமிழ் அரிமா, பேராசிரியர் சி.இலக்குவனார் – தினமலர்

தமிழ் அரிமா, பேராசிரியர் சி.இலக்குவனார் – தினமலர் 1909 – நவம்பர் 17   இன்றைய நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள, வாய்மைமேடு ஊரில் பிறந்தவர், லட்சுமணன். எட்டாம் வகுப்பு படித்த போது, அவரது பெயரை, ‘இலக்குவன்’ எனத், தமிழாசிரியர் சாமி.சிதம்பரனார் மாற்றினார்.   திருவையாறு அரசர் கல்லுாரியில், புலவர் பட்டம் பெற்றார். 1963 இல், மதுரை தியாகராசர் கல்லுாரியில் பணியாற்றிய போது, தொல்காப்பியத்தை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு, விரிவாக ஆய்வு அறிக்கையும் வெளியிட்டார். இதற்காக, சென்னை முதல் குமரி வரை, இவருக்குப் பாராட்டு…

ஏழேகால்இலட்ச உரூபாய்ப் பரிசு தரப்போகும் ஒளிப்படப் போட்டி!

ஏழேகால்இலட்ச உரூபாய்ப் பரிசு தரப்போகும்  ஒளிப்படப் போட்டி!   கோவை  இலட்சுமி இயந்திரப்பணிகள் (Lakshmi Machine Works Limited/LMW) நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் மறைந்த  முனைவர் செயவர்த்தனவேலு நினைவாக கடந்த ஐந்தாண்டுகளாக நடத்தப்பட்டுவரும் தே.செ (D.J.) நினைவு  ஒளிப்படப்போட்டி ஆறாவது முறையாக இப்போது நடத்தப்படுகிறது.  போட்டிக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.  எந்த அகவையினரும் கலந்து கொள்ளலாம்.  யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். படங்கள் இந்தியாவில் எடுத்ததாக இருக்கவேண்டும். அனுப்பும் படத்திற்குக் கட்டாயமாகத் தலைப்பு கொடுக்கப்பட வேண்டும். படங்களை  இணையவழியில்தான் அனுப்பவேண்டும்.   இயற்கை…

அரசின் நெருக்கடியால் மூடப்படும் சிறப்புப் பள்ளிகள்!

அரசின் நெருக்கடியால் மூடப்படும் சிறப்புப் பள்ளிகள்   வெளியூர்  பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்ய அரசு ஆணை உள்ளது. ஆனால், மாநிலத்திற்குள் மட்டுமே பயணிக்க முடியும். பிற மாநிலங்களுக்குச் செல்லும்  பேருந்துகளில் சலுகைக் கட்டணத்தில் பயணிக்க  இசைவில்லை.   மாற்றுத்திறனாளிகளாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக்குக் குழு அலுவலகம் பெங்களூருவில் உள்ளது. அரசுப் பேருந்தில் பெங்களூரு சென்றால், ஓசூரில் இறக்கி விட்டு விடும் அவலம் உள்ளது. மீதிக் கட்டணம் செலுத்த முன்வந்தாலும் ஏற்பதில்லை.   அதே நேரத்தில், சென்னையில்…

திண்டிவனம்அருகே (கீழ்பசார்) 12 ஆம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு

திண்டிவனம்அருகே (கீழ்பசார்) 12 ஆம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு  திண்டிவனம் அருகே, கீழ்ப்பசார்  ஊரி்ல், சிதிலமடைந்த சிவன் கோவிலைத் திருப்பணிக்காக தோண்டிய போது, 12 ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. சிவன் கோவில் திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ளது, கீழ்பசார் ஊர். இங்கு மிகவும் சிதிலமடைந்த நிலையில், சிவன் கோவில் உள்ளது.   இக்கோவிலை மீளமைத்துத்  திருப்பணி செய்வதற்காக ஊர் மக்கள் தோண்டிய போது, தொல்லியல் ஆய்வாளர் கோ.உத்திராடம்  17 ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தார்….

கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி: இரா.மோகன்

    கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி: இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை உலகில் தடம் பதித்த கவிஞர்கள் நால்வர். இவர்கள் ஒவ்வொருவாருக்கும் தனிச்சிறப்பு உண்டு. நால்வருள் மோனையைப் போல் முன்னிற்பவர் பாரதியார். இவர் 39 ஆண்டுகளே வாழ்ந்து கவிதை உலகில் சாதனை படைத்தவர். பாரதியாருக்கு அடுத்த நிலையில் புகழ் பெற்று விளங்கியவர் பாரதிதாசன்; பாரதியாருக்கு ஒன்பது ஆண்டுகள் இளையவரான இவர் 73 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர்.    கவிமணி சி.தேசிக விநாயகம் (பிள்ளை) (1876–1954) பாரதியாரை விட ஆறு ஆண்டு மூத்தவர்….