முதல்குறள்கல்வெட்டு16 :muthal kalvettu16 முதல்குறள்கல்வெட்டு17 :muthal kalvettu17

  சென்னை குறள்மலைச்சங்கம் சார்பில், ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகில்உள்ள மலையப்பாளையத்தில் உள்ள உதயகிரி முத்துவேலாயுதசாமி கோவிலில் கல்வெட்டில் முதல்திருக்குறள் எழுதப்பட்டுள்ளது.

  2047 ஆனி 19  / 2016 சூலை அன்று கல்வெட்டில் முதல் குறள் திறப்பு விழா நடைபெற்றது. இவ் விழாவில் இ.வி.ஆ.மை.(இசுரோ) இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கலந்து கொண்டு கல்வெட்டில் முதல் திருக்குறளை அறங்கேற்றம் செய்து பேசினார்.

  திருக்குறளை  நாள்தோறும் படிக்க வேண்டும். அதைப்புரிந்து கொண்டு, அதன்படி நாம்வாழ்க்கையில் வாழ வேண்டும். இங்கே திருக்குறள் கல்லில் பதியப்பட்டிருப்பது போல், ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், மனத்திலும் பதிய வேண்டும். ஒவ்வொரு மனிதரும் எப்படி வாழ வேண்டும் என்று திருவள்ளுவர் கூறி உள்ளார். கற்றவர்கள் படித்து முடித்து விட்டு முடங்கி கிடக்கக் கூடாது. அவர்கள் மேல்நிலைக்கு வரவேண்டும். எப்படிக் கற்க வேண்டும் என்பது

கற்க, கசடற,  கற்பவை கற்றபின்

நிற்க, அதற்குத்தக

என்ற குறளில்கூறப்பட்டுள்ளது. நாம் வாழ்க்கையில் இசைபட வாழ வேண்டும் . இசைபட வாழ வேண்டும் என்பது, பிறர்வசைபடாமல் வாழ்வதாகும். பிறர் வசைபடும் வகையில் வாழ்வதை விட இறந்து விடுவது நல்லது.

 இவ்வாறு அவர் பேசினார்.

  விழாவிற்குச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமை தாங்கினார். குறள்மலைச்சங்கத்தின்நிறுவனர்  இரவிக்குமார் வரவேற்றுப் பேசினார். சென்னை வி.சி..பி. தலைவர் வி.சி.சந்தோசம் முன்னிலை வகித்தார்.

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

தகவல் : கோபி