கி.பி.அரவிந்தன் இலக்கியப் போட்டி ; aravinthan_poatti

காக்கைச் சிறகினிலே‘ மாத இதழ் முன்னெடுக்கும்

கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு

– ‘புலம்பெயர் இணைய

வலைப் பதிவர் போட்டி 2017 / தி.பி.2048′ –

 

 ‘காக்கைச் சிறகினிலே’ இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் புதிய தடமாக அமைகிறது இந்தப் போட்டி.

 பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !” என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்று. புலம்பெயர் இலக்கியப் பதிவர் பரிசாக இம்முறை நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இதற்கேற்ப இணைய வலைப் பதிவர்களையும் அவர்களது வலைப்பதிவின் நுழைவு முகவரிகளையும் அவர்களது சிறப்பான பதிவுகளையும் குறிப்பிட்டு தகுந்த வகையில் எமக்கு அறிமுகப்படுத்தி வைக்கலாம். புலப்பெயர்வின் வாழ்வில் தமது தன்னார்வத்தினால் புலப்பெயர்வின்  தன்னாக்கப் படைப்புகளாக  வழங்கிவரும் ஆற்றலாளர்களைச் சிறப்பிக்கும் முகமாக இந்தப் போட்டி  அமைகிறது. இத்தெரிவில் இணையத் தளங்கள்  கருதிப்பார்க்கப்படமாட்டாது.

  தொன்மமும் நீட்சியுமாக நீண்ட நெடிய பயணத்தில் இயங்கும் தமிழ் இயல் – இசை – நாடகமென்ற முத்தளத்தையும் கடந்து புதிய ‘கணிணித் தமிழாக’ நான்காவது  தளத்தில் இன்று பவனி வரும் சூழலில் இப்போட்டி அமையப் பெறுகிறது

  உலகெங்கும்  பரவியுள்ளவர்களாகித் தொடரும் வாழ்வில் அடுத்தடுத்த தலைமுறையினர் எண்ணங்களைக் கொண்ட எழுத்துகளையும் படைப்புகளையும் ஊக்குவிக்கும் முகமாக இப் போட்டி அமைகிறது.

நெறியாளர் தமிழ் இலக்கிய ஆர்வலர் இ.பத்மநாப(ஐயர்) வழிகாட்டுதலுடன்

கவிதாஇலட்சுமி (நோர்வே) –  கானாப் பிரபா (அவுத்திரேலியா) –  இரா. எட்வின் (தமிழ்நாடு) – முகிலன் (பிரான்சு) ஆகிய  உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட குழுவினர்  ஆய்ந்து முடிவெடுப்பர்.

 படைப்பு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: kaakkaicirakinile@gmail.com

தலைப்பு: ‘புலம்பெயர் இணைய வலைப் பதிவர் போட்டி 2017’ எனக் குறிப்பிடல் வேண்டும்.

 படைப்புகள் அனுப்பவேண்டிய கடைசி நாள் : தை 02, 2048 / 15.01.2017

முதல் பரிசு : 10 000 இந்தியஉரூபாய்கள், சான்றிதழ்

இரண்டாவது பரிசு : 7500 இந்தியஉரூபாய்கள், சான்றிதழ்

மூன்றாவது பரிசு : 5000 இந்தியஉரூபாய்கள், சான்றிதழ்

ஆறுதல் பரிசுகள் – சிறந்த பதிவர்களையும் அவர்களது சிறப்பான பதிவுகளையும் குறிப்பிட்டு அனுப்பும் வாசகர்களுக்கு வழங்கப்படும்

-முகிலன் (மறைந்த கவிஞர் கிபி அரவிந்தனின் நாற்பதாண்டுக்கால நெருங்கிய தோழன்)

ஆசிரியர் குழு, ‘காக்கைச் சிறகினிலே’ மாத இதழ்

kmukunthan@gmail.com