கவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்!
கவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்!
இ.ஆ.ப. அலுவலராகச் சிறப்பாகப் பணியாற்றிய இயற்பெயர் பி.பாண்டியன் எனக் கொண்ட கவிஞர் முனைவர் பேகன் இன்று ( ஆனி 11, 2050 / 26.06.2019) காலை செய்தி கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது வியர்த்துக் கொட்டுவதாகக் கூறிப் பின்னர் உயிரிழந்தார். இவரது மக்கள் வெளிநாட்டில் உள்ளதால் அவர்கள் வருகைக்காக இரு நாள் பின்னரே இறுதிச்சடங்கு நடைபெறும் என அவரின் உறவினர், மேனாள் மொழிபெயர்ப்புத் துணை இயக்குநர், முனைவர் கு.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
சிறந்த கவிஞராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் திகழ்ந்து பல நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் படைத்துள்ளார். இவரது பரிபாடல்,மணிமேகலை, முத்தொள்ளாயிரம், கலித்தொகை, சூளாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்கள் அறிஞர்களின் பாராட்டுகளைப் பெற்ற சிறப்பான நூல்களுள் சிலவாகும்.
இவரது பாடல்கள் பி.சுசிலா போன்ற இசைவாணர்கள் குரலில் இசைப்பேழைகளாகவும் வந்துள்ளன.
தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்புத் திறனாய்வு நூலைத் தாம் வட்டார வளர்ச்சி அலுவராக இருந்த பொழுதும் அன்றாடம் தட்டச்சிட்டுக் கொடுத்த செயலை மறக்க முடியாது.
பின்வருவனவற்றைக் காண்க:
கவியோகி பேகன் அவர்களின் கவிதைப் பணி – கவிதை விக்கி
கவிஞர்கள் கவிதை ஆய்வரங்கத்தில் மறைமலை இலக்குவனார் புகழாரம் – தினமலர்
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி ஆற்றுப்படை
கவியோகி தளம்
இவரது மறைவில் வாடும் குடும்பத்தினருக்கும் சுற்றத்தினருக்கும் ஏற்பட்ட ஆழ்ந்த துயரத்தல் அகரமுதல மின்னிதழ், இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்க்காப்புக்கழகம் ஆகியன பங்கேற்கின்றன.
முகவரி
பழைய எண் 8, பாசுகரா தெரு, இரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை-24.
தொடர்பு எண் : திருவாட்டி இராணி – 93840 44999
Leave a Reply