தேவதானப்பட்டிப் பகுதியில்

வணிக நிறுவனங்கள்

குப்பைகளைப் பிரித்துக் கொட்டவேண்டும்

-பேரூராட்சி அறிவிப்பு

kuppai01

தேவதானப்பட்டிப் பகுதியில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம்பிரித்து கொட்டவேண்டும் எனப் பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம்பிரித்துக் கொட்டவேண்டும் எனவும் வணிக நிறுவனங்கள், திருமணம் முதலான சிறப்பு நிகழ்வுகள் நடத்துபவர்கள் குப்பைகளை வெளியே கொட்டாமல் தங்கள் செலவிலேயே மட்கும் குப்பை, மட்காத குப்பை எனத் தரம்பிரித்து வைத்துப் பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பைகளை வாங்கும் இழுவையூர்திகளில் கொட்டவேண்டும் என அறிவித்துள்ளது. அவ்வாறு தரம் பிரிக்காமல் கொட்டும் வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் உரிமையாளர்களுக்கு ஒறுப்புத்தொகை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இவை தவிர ஈகநார்(பாலித்தீன்) பொருட்கள் ஈகநார்ப் பைகள் தடை செய்யப்பட்டுள்ளன எனவும் மொத்தமாகவோ சில்லரையாகவோ விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை விளம்பரப் பதாகைகள் மூலமும் அவ்வப்பொழுது ஒலிபெருக்கி வழியாக அறிவித்தும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துகிறது

thevathanappatti_kuppai_vaigaianeesu

வைகை அனிசு, 9715795795, தேவதானப்பட்டி