30 இளநிலை அறிவியல் அதிகாரி பணி யிடங்கள் : தமிழகத் தேர்வாணையம் அறிவிப்பு

30 இளநிலை அறிவியல் அதிகாரி பணி யிடங்கள் :  தமிழகத் தேர்வாணையம் அறிவிப்பு தமிழக அரசின் தடய அறிவியல் சார்புநிலைப் பணிப்பிரிவில் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ள 30 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற பட்டதாரிகளிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விவரம் வருமாறு: அறிக்கை எண்: 11/2016 விளம்பர எண்: 441  நாள் 29.07.2016 பணி:  இளநிலை  அறிவியல் அலுவலர்(Junior Scientific Officer) காலியிடங்கள்: 30…

அறிவிப்பு: 3 திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப் பெறும்.

  அறிவிப்பு : 3 திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப் பெறும்.   அன்புடையீர் வணக்கம். வேறு சில பணிகளால், இனி வரும் மூன்று திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப்பெறும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆசிரியர், அகரமுதல

‘நவீனநொச்சி’ – படைப்புகள் வரவேற்கப்படுகின்றன

‘நவீனநொச்சி’ – இலக்கிய இதழுக்குப் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன       வணக்கம். இருமாதக் கவிதை இதழான‘நவீனநொச்சி’ இது வரை பத்து (10) இதழ்கள் வெளிவந்துள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்விதழின் முதன்மை நோக்கங்களில் ஒன்று மாணவர்களிடமும் ஆய்வாளர்களிடமும் உள்ள படைப்பாற்றல் திறத்தை வளர்த்தெடுப்பதும் ஊக்குவிப்பதும் ஆகும். அதனால் மாணவர்கள் ஆய்வாளர்கள் தம் படைப்புகளை ஒரே கட்டுக்குள் மின்னஞ்சலிலோ இதழின் முகவரிக்கோ அனுப்பலாம். பல்கலைக் கழகப் பேராசியர்களும் கல்லூரிப் பேராசியர்களும் இலக்கிய ஆர்வலர்களும் நவீனநொச்சி வாசகர்களும் அன்போடு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தமிழர் திருநாளாகிய…

குப்பைகளைப் பிரித்துக் கொட்டவேண்டும்- தேவதானப்பட்டிப் பேரூராட்சி

தேவதானப்பட்டிப் பகுதியில் வணிக நிறுவனங்கள் குப்பைகளைப் பிரித்துக் கொட்டவேண்டும் -பேரூராட்சி அறிவிப்பு தேவதானப்பட்டிப் பகுதியில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம்பிரித்து கொட்டவேண்டும் எனப் பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம்பிரித்துக் கொட்டவேண்டும் எனவும் வணிக நிறுவனங்கள், திருமணம் முதலான சிறப்பு நிகழ்வுகள் நடத்துபவர்கள் குப்பைகளை வெளியே கொட்டாமல் தங்கள் செலவிலேயே மட்கும் குப்பை, மட்காத குப்பை எனத் தரம்பிரித்து…

“வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்” மாநாடு தள்ளிவைப்பு!

இன்று நடைபெற இருந்த “வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்” மாநாடு தள்ளிவைப்பு!   தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் சென்னையில் ‘வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்’ என்ற தலைப்பிலான தமிழகம் தழுவிய சிறப்பு மாநாடு, இன்று (புரட்டாசி 12, 2045 / 28.09.2014), நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வந்தன.   இந்நிலையில், முதலமைச்சர் செயலலிதா வழக்குத் தொடர்பானத் தீர்ப்பால் தமிழகமெங்கும் பதற்றச்சூழல் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, மாநாடு வேறொரு நாளுக்கு தள்ளி வைக்கப்படுகின்றது. மாநாடு நடைபெறும் நாள், பின்னர் அறிவிக்கப்படும்.   மாநாடு…

உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு- செருமனி

   உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கம், ஐரோப்பிய ஒன்றியம் 40 ஆவது ஆண்டு நிறைவு விழா   12 ஆவது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் 2014 அக்டோபர் 4,5 ஆம் நாள்களில் செருமனியில் நடைபெற உள்ளது.   உலகத் தமிழர் பண்பாடு, கலை,பண்பாடடு, வாழ்வியல் மேம்பாடு, தமிழ்க் கல்வி போன்றவற்றைப் பற்றிய பதிவுகளாக   உலகளாவிய தமிழ்க்கல்வி புலம் பெயர் தமிழர்கள் தமிழர் சமயமும் வழிபாடும் தமிழர் நாகரிகமும் தமிழ்க் கலைகளும் தமிழ் மரபுகள்…

13 ஆவது தமிழ் இணைய மாநாடு – கட்டுரைகள் பற்றியஅறிவிப்பு

13 ஆவது தமிழ் இணைய மாநாடு கட்டுரைகள், ஆய்வுச்சுருக்கங்கள் அனுப்புவதற்கான அறிவிப்பு    உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) நடத்தும் 13 ஆவது  தமிழ் இணைய மாநாடு 2014 புதுச்சேரியில் செப்டம்பர் மாதம் 19-21  நாள்களில்  நடைபெற உள்ளன.   புதுவை பல்கலைக்கழகம், புதுவை தமிழ்ச் சங்கம், புதுவை மொழியியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம், பல்லவன் கல்வி நிறுவனங்கள், இந்திய மொழிகளுக்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன்  இணைந்து உத்தமம் இம்மாநாட்டை நடத்த உள்ளது.        2014 மாநாட்டிற்குத்…

தாவணி நாள் கொண்டாடுக! – சகாயம் வேண்டுகோள்

 கூட்டாலை(கோவாப்டெக்சு) நிறுவனம் உலக மகளிர் நாளான மார்ச்சு 8 அன்று  தாவணிநாள் கொண்டாட முடிவெடுத்துள்ளது. கடந்த திங்கள் வேட்டி நாள் கொண்டாடியதுபோல், மார்ச்சு 8 வரையிலான ஒரு நாள் தாவணி நாள் கொண்டாடும்படி அதன் மேலாண் இயக்குநர் சகாயம் இ.ஆ.ப. வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கேற்ப கூட்டாலை விற்பனை நிலையங்களில், பல வண்ணங்களில், தாவணிகள் விற்பனைக்கு  வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். வேட்டிநாளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததுபோல், கல்லூரி மாணாக்கியரிடமும் பல்கலைக்கழக மாணாக்கியரிடமும் தாவணி நாளுக்குப் பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது