50_trafficjam-rain

தேவதானப்பட்டி அருகே உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் மரம் சாய்ந்ததால்; போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தேவதானப்பட்டி அருகே உள்ள   மலைச்சாலையிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் மழை பொழிந்தால் அவ்வப்போது பாறைகள் உருளுவதும், மரங்கள் சாய்வதும் வாடிக்கையாக இருக்கும்.

இந்நிலையில் கடந்த 1 வார காலமாகத் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொடைக்கானல் பகுதியில் நிலச்சரிவும் மண்சரிவும் ஏற்படுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே மழைக்காலங்களில் சாலைகளில் விழும் கற்களையும் மரங்களையும் அப்புறப்படுத்த உலவூர்தி (ரோந்து வாகனம்) அமைக்கவேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

50maramsaayvu