அடிக்கடி பழுதாகும் கொடைக்கானல் மலைச்சாலை

அடிக்கடி பழுதாகும் கொடைக்கானல் மலைச்சாலை நிலையான தீர்வுகாண சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்   தேவதானப்பட்டி அருகே உள்ள மலைச்சாலையிலிருந்து டம்டம்பாறை வழியாகக் கொடைக்கானல் சென்றடையலாம். இச்சாலைகள் அடிக்கடி பழுதாவதால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கடும் அவதிப்படுகின்றனர்.   மலைப்பாதையிலிருந்து கொடைக்கானல், பூம்பாறை, பூலத்தூர் முதலான மலை யூர்களுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். கடந்த 50 முன்னர்களுக்கு முன்னர் இப்பகுதி மக்கள் பெரியகுளம் வழியாகவும், தேவதானப்பட்டி வழியாகவும் குதிரைகள் மூலம் சென்று வந்தனர். தற்பொழுது வாகனப் பெருக்கம் மற்றும் சாலை வசதிகளினால் குதிரைகளை விட்டு விட்டுப் பேருந்துகளிலும்,…

கொடைக்கானல் செல்லும் சாலை மூடப்பட்டதால் வெறிச்சோடிய உணவகங்கள்

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள டம்டம்பாறை அருகே ஏறத்தாழ 16க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.    இப்பகுதியில் இதுவரை 110க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இப்பொழுது ஏற்பட்டுள்ள நிலச்சரிவு கொடைக்கானல் செல்லும் பாதையை நிலைகுலைய வைத்தது. இந்நிலையில் கொடைக்கானல் செல்பவர்கள் தாண்டிக்குடி, பழனி வழியாகக் கொடைக்கானல் சென்றனர். இப்போது இருசக்கர, சிறிய வகை ஊர்திகள் மட்டுமே பயன்பாட்டிற்காகத் திறந்துவிடப்பட்டுள்ளன.    இந்நிலையில் மலைப்பகுதியில் தொடர்ச்சியாகத் தொடர்ந்து மழை பொழிவதால் சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியில்…

கொடைக்கானல் பாதை சீரமைக்கும் பணி மந்தம்

  கொடைக்கானல் பாதை சீரமைக்கும் பணி மந்தம்   தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள டம்டம்பாறை பகுதியில் கடந்த இரண்டு நாளுக்கு முன்னர்ப் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பாறைச் சரிவுகள் ஏற்பட்டன.   காட்டாற்று வெள்ளம், இயற்கையான மழைநீர் ஊற்றுகள், அருவிகளில் இருந்து வந்த தண்ணீர் கொடைக்கானல் செல்லும் சாலையை அரித்தும், சாலைகளில் கற்கள் குவியலாகவும் காட்சியளித்தது. சில இடங்களில் சாலைகள் அடியோடு துண்டிக்கப்பட்டது. இதனால் பூலத்தூர், கொடைக்கானல், கவுஞ்சி,பூம்பாறை போன்ற இடங்களுக்குச் சென்றவர்கள் கடும் அவதிப்பட்டனர். இதற்காக மாற்று வழி ஏற்படுத்தப்பட்டது….

கொடைக்கானலில் மீண்டும் நிலச்சரிவு!

  கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்மழையால் இரண்டாவது முறையாக பத்து இடங்களில் நிலச்சரிவு போக்குவரத்து சீராகப் பல நாட்கள் ஆகும்   பேரிடர்!     தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள டம்டம்பாறை பகுதியில் தொடர்ந்து இரவு பகலாக மழை பொழிந்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மலையிலிருந்து வரும் காட்டாற்று வெள்ளம், இயற்கையாக உருவான ஆறுகள் ஆகியவற்றின் மூலம் மலைப்பகுதியில் உள்ள சாலைகள் தொடர்ந்து அரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் மழை பொழியாததால் ஆழ்துளைக்கிணறுகளுக்காகத் துளைபோட்டும் பாறைகள்   எடுப்பதற்கும் வீடுகள் கட்டுவதற்கும்…

கொடைக்கானலுக்குச் செல்லும் பேருந்துகளில் கூடுதல் கட்டணம்

    தேவதானப்பட்டி அருகே உள்ள டம்டம்பாறை பகுதியில் 16க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.    இந்நிலையில் சித்தரரேவு, தாண்டிக்குடி வழியாக ஒரு வழியும், பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் பாதை மற்றொரு பாதையாகவும் செயல்பட்டு வருகிறது. இதனைப்பயன்படுத்தித் தனியார் பேருந்துகள், தாண்டிக்குடி வழியாகச் செல்கின்ற பேருந்துகள், கொடைக்கானலுக்கு 100 உரூபாயும் பழனி வழியாகச் சுற்றி வருகின்ற வாகனங்கள் 150உரூபாயும் கட்டணம் பெறுகின்றனர். ஏற்கெனவே சரக்குச்சிற்றுந்துகள், சிற்றுந்துகள் கொடைக்கானலுக்கு 50உரூபாய் கட்டணம் பெற்றன. தற்பொழுது…

கொடைக்கானல் மலைச்சாலையில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

தேவதானப்பட்டி அருகே உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் மரம் சாய்ந்ததால்; போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தேவதானப்பட்டி அருகே உள்ள   மலைச்சாலையிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் மழை பொழிந்தால் அவ்வப்போது பாறைகள் உருளுவதும், மரங்கள் சாய்வதும் வாடிக்கையாக இருக்கும். இந்நிலையில் கடந்த 1 வார காலமாகத் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொடைக்கானல் பகுதியில் நிலச்சரிவும் மண்சரிவும் ஏற்படுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மழைக்காலங்களில் சாலைகளில் விழும் கற்களையும் மரங்களையும் அப்புறப்படுத்த உலவூர்தி (ரோந்து வாகனம்) அமைக்கவேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை…