சமக்கிருதத்திற்கும் தாய்மொழி தமிழ்தான்!

வல்லுநர் குழு அமைக்க வேண்டுகோள். 

ஆ. இரா.அமைதி ஆனந்தம் ஆவணிப்பூர் இராமசாமி <aa384485@gmail.com

பெறுநர்

இந்தியத் தலைமை அமைச்சர், இந்திய அரசு.

படி :

இந்தியக் குடியரசுத் தலைவர், இந்திய அரசு.

இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர், இந்திய அரசு.

இந்திய அமைச்சர், மனித வள மேம்பாடு, இந்திய அரசு.

இந்திய அமைச்சர்,  அறிவியல், தொழில்நுட்பம், இந்திய அரசு.

இந்திய அமைச்சர், தகவல் தொழில்நுட்பம், இந்திய அரசு.

முதலமைச்சர்கள், இந்தியா.

ஐயா,

உளறல் அல்ல; உண்மை; உண்மையைத் தவிர வேறில்லை; கி.மு. 1500 – 2500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் எழுத்து ஒலியை /ஓசையை மையமாக வைத்துதான் நாடு கடந்து வந்தவர்கள் சமக்கிருதத்தை உருவாக்கினார்கள். சமக்கிருதத்தில் இருந்து எந்த இந்திய மொழியும் உருகாகவில்லை; உண்மையில், தமிழின் நீட்சிதான் சமக்கிருதம். சமக்கிருதத்திற்கும் தாய்மொழி தமிழ்தான்.

எழுத்து மொழியாக உருவான சமக்கிருதம் மக்கள் பேசும் மொழியாக இல்லாமையால், இலக்கிய வளம் இருந்த போதும் அன்று போல் (பாணினி காலம்) இன்றும் மாறாமல் அப்படியே உள்ளது.

ஆனால், மக்கள் பேசும் மொழியாக இருந்த தமிழ் காலம்தோறும் மாறி மாறி பல பல இந்திய மொழிகளாக, (உதாரணமாக இந்தியாக,  மராத்தியாக, பஞ்சாபியாக),  சம க்கிருத த் தாக்கத்தால் பிரிந்தது. எனினும் மூலத் தமிழ், தமிழக அளவில் (இந்தியாவில்) குறைந்த எழுத்துகள் உள்ள மொழியாக உருவாகி அன்று போல் இன்றும் தனித் தன்மையுடன்  வாழ்கின்றது.

குறிப்பாகக், கூட்டு எழுத்து (combined alphabets), ஒட்டு எழுத்து (conjunct alphabets), மறைமுக எழுத்து (implicit alphabets), போன்ற சிக்கலான எழுத்துகள் (complicated alphabets), இல்லாமல் இருப்பது தமிழின் தனிச்சிறப்பு.

ஆனால், தன்னலம் மிகுந்த பலர் இந்த உண்மையை வெளியில் தெரியாமல் மறைக்கின்றனர்.

இதனை இந்திய அரசு அலசி ஆராய உயர்நிலை மொழி ஆய்வு வல்லுநர் குழு ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும்.

இந்த உண்மையை இந்த உயர்நிலைக்குழு நிலைநாட்டும் என்று நம்புகிறேன்.

அன்புடன் / Ever Yours

ஆ. இரா.அமைதி ஆனந்தம் / A.R.Amaithi Anantham