தொல்காப்பியம்: இந்தி, கன்னடத்தில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்ட இந்திய அரசு

தொல்காப்பியம் தமிழ் இலக்க நூலின் இந்தி மொழி பெயர்ப்பு நூலையும் கன்னட மொழியில் தொல்காப்பியத்தின் தமிழ் நூல் மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை மொழிபெயர்த்து இந்திய அரசு வெளியிட்டிருக்கிறது. என்ன காரணம்? செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (அ) செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் (சிஐசிடி), தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இந்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஓர் ஆய்வு நிறுவனமாகும். இந்த மையம் மூலமாகத் தமிழ்ப் பழங்கால இலக்கணத்தைப் பிற இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி…

பேரிடர்க்கால மறுவாழ்வு: நிலையான அமைப்பு தேவை – இலக்குவனார் திருவள்ளுவன்  

பேரிடர்க்கால மறுவாழ்வு: நிலையான அமைப்பு தேவை தமிழ் நாட்டின் கடேலார மாவட்டங்களில் கசா(கஜா) புயல் கடுமையாக வீசி மக்களின் வாழ்க்கையை நிலைகுலையச் செய்துவிட்டது. சரியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, பாதிப்பைக் குறைத்துள்ளதாகவும் முழு வீச்சில் மறுவாழ்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அரசு கூறி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஓரளவு பாராட்டினாலும், உரிய மறுவாழ்வுப் பணிகள் நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. பேரிடர்கள் என்பது இன்று நேற்று வருவன அல்ல. காலந்தோறும் ஏற்படும் இயற்கை நிகழ்வுகள்தான். இடர்கள் வரும்பொழுது எவ்வெவ்வாறு தடுக்க வேண்டும், அவற்றிலிருந்து எவ்வாறு…

சமக்கிருதத்திற்கும் தாய்மொழி தமிழ்தான்! – அமைதி ஆனந்தம் மடல்

சமக்கிருதத்திற்கும் தாய்மொழி தமிழ்தான்! வல்லுநர் குழு அமைக்க வேண்டுகோள்.  ஆ. இரா.அமைதி ஆனந்தம் ஆவணிப்பூர் இராமசாமி <aa384485@gmail.com பெறுநர் இந்தியத் தலைமை அமைச்சர், இந்திய அரசு. படி : இந்தியக் குடியரசுத் தலைவர், இந்திய அரசு. இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர், இந்திய அரசு. இந்திய அமைச்சர், மனித வள மேம்பாடு, இந்திய அரசு. இந்திய அமைச்சர்,  அறிவியல், தொழில்நுட்பம், இந்திய அரசு. இந்திய அமைச்சர், தகவல் தொழில்நுட்பம், இந்திய அரசு. முதலமைச்சர்கள், இந்தியா. ஐயா, உளறல் அல்ல; உண்மை; உண்மையைத் தவிர வேறில்லை;…

காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் -பெ. மணியரசன்

காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் உச்ச நீதிமன்றம் 18.5.2018 அன்று இறுதி செய்த காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருபெரும் ஊனங்கள்  இருக்கின்றன. ஒன்று, கருநாடக அணைகளின் மதகுகளைத் திறந்து மூடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மட்டுமே உண்டு என்று நேரடியாகக்கூறப்படாதது. கருநாடக அணைகளின் மதகுகளைத் திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகப் பாசனத்துறையினர்க்கு ஆணை இட்டுத்தான்செயல் படுத்த முடியும் என்ற நிலை இருந்தால், கர்நாடக அரசு அவ்வாறு தன் அதிகாரிகளும் ஊழியர்களுக்கும் திறக்கக் கூடாது என்று ஆணைஇட்டால், நிலைமை என்னவாகும்? ஏனெனில் ஏற்கெனவே பலமுறை தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடும்படி உச்சநீதிமன்றம் ஆணை இட்டும் அதைச் செயல்படுத்த முடியாதுஎன்று வெளிப்படையாகக் கர்நாடக அரசு மறுத்து வந்துள்ளது. கடந்த 2016 இல் 10,000 கன அடி, 6,000 கன அடி, 2000 கன அடி  தண்ணீர் திறந்து விடுமாறு பலமுறை உச்சநீதிமன்றத் தீபக் மிசுரா ஆயம் கட்டளை இட்டும் தண்ணீர் திறந்து விட மறுத்து விட்டது கருநாடக அரசு. அது மட்டுமின்றிக், கருநாடகச் சட்டப்பேரவையைக் கூட்டித் தண்ணீர் திறந்து விட முடியாதுஎன்று ஒருமனமாகத் தீர்மானம் நிறைவேற்றியது கருநாடக அரசு. உச்சநீதிமன்றக் கட்டளையை மீறியதற்காக கருநாடக அரசின் மீது உச்சநீதி மன்றமோ அல்லது இந்திய அரசோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு பாதிக்கப்பட்டதுதான் மிச்சம்! இரண்டாவது ஊனம், ஏதாவதொரு மாநிலம் மாற்றுக் கருத்து கூறினால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் வாக்களிக்கும் உரிமையுள்ள ஒன்பதுஉறுப்பினர்களின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி முடிவெடுக்க வேண்டும் என்று இருப்பதாகும். ஆணையத்தின் தலைவர் மற்றும்நான்கு உறுப்பினர்கள் –ஆக மொத்தம் ஐந்து பேர் நடுவண் அரசின் அதிகாரிகள்; நடுவண் அரசால் அமர்த்தப்படுவோர் ஆவர். தமிழ்நாடு முதலான நான்கு மாநிலங்களுக்கும் தலைக்கு ஒருவர் வீதம் நான்கு பேர். இதில் கருநாடக உறுப்பினர் மாற்றுக் கருத்து தெரிவித்து, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடமறுத்தால், நடுவண் அரசின் ஐந்து உறுப்பினர்கள்நடுவண் அரசின் வழிகாட்டுதல் படி நடந்து கொள்வார்கள். காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 – இல் வழங்கப்பட்டதிலிருந்து, இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு செயல்படுத்துமாறு  2013 – இல் உச்சநீதிமன்றம் ஆணையிட்டதிலிருந்து இதுவரை எந்தத் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்து வருகிறது  இந்திய அரசு. காங்கிரசு அரசாக இருந்தாலும் பாசக அரசாக இருந்தாலும் நடுவண் அரசின் நிலைபாடு எப்போதும்தமிழ்நாட்டிற்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதுதான். இனி அந்தப் பாகுபாடு தொடராது என்பதற்கு என்ன உறுதி? கருநாடக உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு சாதகமாக இந்திய அரசு அதிகாரிகள் நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. இந்த இருபெரும் ஊனங்கள் புதிய காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருக்கின்றன. இவற்றைச் சரி செய்வது எப்படி? இந்த ஊனங்களால் பாதிப்புவராது என்று நேரடியாகத் தெளிவாக உறுதி கூற நரேந்திர(மோடி) அரசு தயாரா? உச்சநீதிமன்றம் அப்போது தலையிட்டுச் சரிசெய்யுமா? கடந்த காலஅனுபவங்கள், “இல்லை” என்ற விடையைத்தான் தருகின்றன. இவற்றுக்கப்பால், 16.2.2018 அன்று தீபக் மிசுரா ஆயம் அறிவித்த காவிரித் தீர்ப்பு, இந்திய அரசமைப்புச் சட்டவிதிகளுக்கு முரணானது. 1956 ஆம்ஆண்டின் தண்ணீர்த் தகராறு சட்டத்திற்கு எதிரானது. அத்துடன் அத்தீர்ப்பு மரபுவழித் தண்ணீர் உரிமை (Riparian Right) என்ற அடிப்படை உரிமையைத் தகர்த்து விட்டது. தேவைக் கேற்ற தண்ணீர் பகிர்வு (Equitable Share) கோட்பாட்டைத் திணித்துள்ளது. வேளாண்மைக்கு நிகராகத் தொழில்துறைக்குத் தண்ணீர் அளிக்கும் கோட்பாட்டைப் புகுத்தியுள்ளது. இந்த அநியாயங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை மிக மோசமாகக் குறைத்துவிட்டது  உச்ச நீதிமன்றம். எனவே இதைச் சரி செய்ய காவிரி வழக்கிற்கு உச்சநீதிமன்றத்தில் ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வழக்கைத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுக்க வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முல்லைப் பெரியாறு வழக்கு, உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கும் நிலையில்  அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றப்பட்ட முன் எடுத்துக்காட்டையும் சுட்டிக் காட்டி வருகிறது. மேற்கண்ட எச்சரிக்கைகளுடன் – விழிப்புணர்வுடன் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது பற்றி தமிழர்கள் கவனமாக இருக்கவேண்டும். – பெ. மணியரசன் ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக்குழு ========================== செய்தித் தொடர்பகம், காவிரி உரிமை மீட்புக் குழு ========================== பேச: 76670 77075, 94432 74002 ========================== Fb.com/KaveriUrimai #SaveMotherCauvery…

கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 2/2 – ஈழத்து நிலவன்

(கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 1/2  தொடர்ச்சி) கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 2/2    தனது நாட்டில் சிறுபான்மைத் தேசிய இனங்களை அடக்கி வரும் இந்திய அரசு, ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவும் எனச் சிலர் இன்னும் கூறி வருகிறார்கள். இந்தியாவில் தேசிய இனங்களின் உரிமைகளை மறுக்கும் இந்திய அரசு, இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தரும் என்று கூறுபவர்களை என்னவென்று அழைப்பது! மாயமானைக் காட்டி, ஈழத்தமிழர் நீதிக்கான போராட்டத்தைத் திசை திருப்புவோரிடம் எச்சரிக்கையாக இருங்கள்! உலக நாடுகளைச்…

என்று முடியும் ஈழ ஏதிலியர் துயரம்? – இலக்குவனார் திருவள்ளுவன்

செய்தியும் சிந்தனையும் [செய்தி:  நண்பர்  இ.பு.ஞானப்பிரகாசன், மின்னம்பலம் (https://minnambalam.com/k/1459296056 )   தளத்தில் இருந்து பின் வரும் செய்தியை அனுப்பியிருந்தார்: திருச்சிராப்பள்ளி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் ஈழத் தமிழ் ஏதிலியர்கள் பதினான்கு பேர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொய் வழக்குப் பதிவு செய்து தங்களைச் சிறையில் அடைத்துள்ளதாகவும், தங்களை விடுவிக்கும் வரை காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மார்ச்சு 28, 29 ஆகிய இரண்டு நாட்களாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள், மூன்றாவது…

இறையாண்மை என்றால் இதுதான் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

  இறையாண்மை என்னும் சொல்லிற்குக் காலந்தோறும் மாறுபட்ட பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பில் செலுத்தும் வகையில் அதிகாரம் முற்றிலும் உறைதல் (தங்குதல்) என்னும் அடிப்படைப் பொருளில் மாற்றம் மிகுதியாக இல்லை. இறையாண்மை என்பது அண்மையில் பெரிதும் பேசப்பட்டு வருவதால் நாம் இதனை அறிந்து கொள்ள வேண்டியது உள்ளது. தமிழர்க்கு இறையாண்மை மிக்க அமைப்பு தேவையா? அவ்வாறு பேசுவது சரியா? தவறா? தமிழக இறையாண்மை என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானதா? என்பனவெல்லாம் நாம் அறிய வேண்டுவன ஆகும்.புவிப்பரப்பில் சட்டங்களையும் விதிகளையும்  ஆக்கவும்…

இந்தியாவில் 32 இணையத்தளங்களுக்குத் தடை – மணி.மணிவண்ணன் கண்டனம்!

32 இணையத்தளங்களை இந்திய அரசு “தடை” செய்தது சரியா? நன்றி : http://www.bbc.co.uk/tamil/india/2015/01/150101_inidiawebsite.shtml இந்தியாவுக்குள் இணையச் சேவை வழங்கும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு 32 இணையதளங்களைத் தடை செய்யுமாறு, இந்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக, இணையத் தன்னுரிமைக்கான செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். பெங்களூரைச் சேர்ந்த இணையம் – சமூகத்திற்கான மையம் என்கிற இணையத் தன்னுரிமைக்கான தன்னார்வத் தொண்டு அமைப்பு இந்திய அரசு தடை செய்திருப்பதாக கூறப்படும் 32 இணையத்தளங்களின் பட்டியலை ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தது. அதில் பொதுமக்கள் பரவலாக பயன்படுத்தும் காணொளிகளுக்கான இணையத்தளங்கள் உள்ளிட்ட பல புகழ்வாய்ந்த…

இரு நாட்டு மீனவர் பேச்சு – இனப்படுகொலைகளை மறைக்கும் திரை!

  இருவர் அல்லது இரு குழுவினர் அல்லது இரு பிரிவினர் அல்லது இரு  தரப்பாரிடையே சிக்கலோ மோதலோ எழும் பொழுது அவர்களிடையே ஒற்றுமைப்படுத்தும் சொல்லாடல் நிகழ்த்துவது முறையே.  இப்பொழுது சிங்கள மீனவர்களிடையேயும் தமிழக மீனவர்களிடையேயும்  ஏற்படுத்தப்படும் பேச்சு அவ்வாறு, எவ்வாறு அமையும்?   இரு நாட்டு மீனவர்களும் தத்தம் நாட்டு அறிவுரைகளையும் மீறித் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டனரா? ஆதலின், அவர்களிடையே ஒற்றுமைப்படுத்தும் பேச்சு தேவைப்படுகிறதா?    ஆயிரத்தைத் தொடும் அளவு தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது சிங்கள மீனவர்களாலா?   பல்லாயிரக்கணக்கானவர்கள் உறுப்பு இழப்புகளுக்கும் உடைமை…