சார்சாவில் ‘டிடிஎசு நிகழ்வுகள்’ சார்பில் ‘நிரித்யசமர்ப்பண்’ எனும் இந்தியமரபு நடன நிகழ்ச்சி வைகாசி 30, 2045 / 13.06.2014 வெள்ளிக்கிழமை மாலை சார்சா அமெரிக்கப் பல்கலைக்கழக கலையரங்கில் வெகு சிறப்புற நடைபெற்றது.

நிகழ்விற்கு ‘டிடிஎசு நிகழ்வுகள்’ தலைவி செயந்தி மாலா சுரேசு தலைமை வகித்தார். குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

குரு கவிதா பிரசன்னா வரவேற்பு நடனம் நிகழ்த்தினார்.

வள்ளி திருமணம் நிகழ்வினை நேர்த்தோற்றம்போல் நடித்துக் காட்டிய மாணவியரின் நடிப்பனை அமீரகத்திலிருந்து விடைபெற்றுச் செல்ல இருக்கும் இந்தியத் துணைத் தூதர் அசோக் பாபு வெகுவாகப் பாராட்டினார். அவரது மனைவி தனது உரையில் அமீரகத்திலிருந்து தாங்கள் விரைவில் விடைபெற இருந்தாலும் இங்கிருந்து அமீரகத் தமிழர்களின் அன்பினையே சுமந்து செல்வோம் எனக் குறிப்பிட்டார். குத்தாலம் ஏ (இ)லியாக்கத் அலி வாழ்த்துரை வழங்கினார்.

துணைத்தூதர் அசோக் பாபுவிற்கு நினைவுப் பரிசு வழங்கி பொன்னாடை   அணிவித்து பிரசன்னா சிறப்பித்தார். மேலும் சிறப்பு விருந்தினர்கள் மரு. குப்தா, சைஃப் அல் சலால், அரிகேசவநல்லூர் எசு.எசு. மீரான் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.

நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவியர்க்கு, செயந்தி மாலா சுரேசு, சைஃப் அல் சலால், அரிகேசவநல்லூர் எசு.எசு. மீரான் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

(படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)

கவிதா பிரசன்னா நன்றி கூறினார்.