தமிழகப் புலவர் குழு – புதிய பொறுப்பாளர்கள்
தமிழகப் புலவர் குழுவின் 107 ஆவது கூட்டம் கிருட்டிணன்கோவில் நகரில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில், கோலாகலமாக நடந்தேறியது. பங்குனி 07, 2047 / மார்ச்சு 20, 2016 காலை 10.00 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டமானது தொடங்க, கலசலிங்கம் பல்கலை வேந்தர் முனைவர் க.சிரீதரன் வரவேற்புரையாற்றினார்.
புலவர் குழுவின் செயற்குழுக் கூட்டத்தில் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள், பொறுப்பாண்மைக்குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புலவர் குழுவின் தலைவராக முனைவர் சிலம்பொலி செல்லப்பன், துணைத்தலைவராக இதுவரை செயலாளராகப்பணியாற்றிய, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், செயலாளராக முனைவர் மறைமலை இலக்குவனார், துணைச் செயலாளராக திரு. சிரீகாந்த் கண்ணன் ஆகியோரைச் செயற்குழு தேர்ந்தெடுத்துள்ளது.
தமிழகப் புலவர் குழு விவரம்
தலைவர் : சிலம்பொலி. முனைவர். சு. செல்லப்பன்.
துணைத்தலைவர் : முனைவர் ஔவை நடராசன்
: பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன்
செயலாளர் : முனைவர் மறைமலை இலக்குவனாh;.
துணைச்செயலர் : சிரீகாந்து கண்ணன்
உறுப்பினர்கள் : நீதியரசர் திரு. தி. ந. வள்ளிநாயகம்
இயக்குநர் எசு. பி. முத்துராமன்
முனைவர் சாரதா நம்பி ஆரூரன்
புலவர் கருமலைத் தமிழாழன்
புலவர் இளங்கீரன்
கவிஞர் பொன்னடியான்
பொறுப்பாண்மைக்குழு உறுப்பினர்கள்:
தலைவர் : மருத்துவர் மணிமேகலை கண்ணன்
செயலர் : கி. ஆ. பெ. வி. கதிரேசன்
பொருளாளர் : சிவ. தமிழ்ச்செல்வம்
இராச. மணிகண்டன்
கோ. வீரமணி
தமிழகப் புலவர் குழுவுக்காக,
மறைமலை இலக்குவனார்
செயலாளர்
Leave a Reply