உதவி-இராசு ஞானமுத்து04 ;rasugnanamuthu04

இராசல் கைமா  மருத்துவமனையில்

தமிழக இளைஞர்

சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு

உதவிடக் கோரிக்கை

  இராசல் கைமா :இராசல் கைமாவில் உள்ள சைப்  மருத்துவமனையில்  தமிழக இளைஞர்  இராசு ஞானமுத்து(அகவை 41)  சேர்க்கப்பட்டுள்ளார். அவரைச் சொந்த ஊருக்கு  அனுப்பி வைக்க  வாய்ப்பு உள்ளவர்கள் உதவிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் அருகில் உள்ள அனகூட்டம் விளையைச் சேர்ந்தவர் இராசு ஞானமுத்து. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இங்குள்ள சிறிய உணவகத்திற்கு  வேலைக்காக வந்தார் இராசு ஞானமுத்து.

  திடீரென இவருக்கு வாதம்போல் ஏற்பட்டு இவரது உடலின் இடப் புறம் செயல் இழந்து விட்டது. மேலும் பேசும்  திறனையும் இழந்துள்ளார்.

  இவரது வருமானத்தின் மூலமே இவரது குடும்பம் பிழைத்துக் கொண்டிருக்கிறது. இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் இவரது மனைவி என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்.

  இராசல் கைமாவில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த  தானியல் என்ற  அன்பர் அவரைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறார்.

  எனினும் அவரது மருத்துவமனைக் கட்டணம் 5,000 திர்ஃகாத்துக்கு மேல் உள்ளது. மேலும் விமானத்தில் கொண்டு செல்ல 8,500 திர்ஃகாம் செலவாகிறது. இதற்காக இந்திய துணைத் தூதரகத்தில் உதவிகளைப் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  இதுவரை அதற்கான உதவிகள் முழுமையாகக் கிடைக்கவில்லை. அதற்குள்  இராசுவின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு விரைவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டியுள்ளது.

உதவிட விரும்பும் நல்லுள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்

 தானியல்(டேனியல்) : 00971 50 6274997 / 050 51 96 433

 இராசுவின் மனைவி குமாரிஇலதா  வங்கிக் கணக்கு விவரம் :

திருவாங்கூர் வங்கி – தேங்காய்ப்பட்டினம் கிளை, தமிழ்நாடு :

 க/எண் 67044168909

[MRS. KUMARI LATHA

A/C NO.: 67044168909

IFSC CODE: SBTR0000289

State Bank of Travancore, Thengapattanam branch,

Marthandam-Thengapattanam Rd, Thengapattanam, Tamil Nadu 629173, India.]

[படங்கைள அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

தகவல்: முதுவை இதாயத்து