:தலைப்பு-தமிழ்க்குடில் muthirai_thamizhkudil_arakkallalai

தமிழ்க்குடில் அறக்கட்டளை போட்டிகள்

  ஒவ்வொரு வருடமும் தமிழ்க்குடில் அறக்கட்டளை கவிதை, கட்டுரை மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடத்துவது தாங்கள் அறிந்ததே. இந்த வருடத்திற்கான போட்டிகளின் விவரங்கள் கீழே:

போட்டி எண் 1

திரு. காமராசர் அவர்களின் 113 ஆவது பிறந்த நாளை முன்னிட்டுத் தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் மூன்றாம் ஆண்டு கட்டுரைப்போட்டி

தலைப்பு : ‘இன்றைய நெருக்கடியான கல்விச்சூழலில் காமராசர்’

விதிமுறைகள்:

  1. போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும்

இருக்கலாம். (பள்ளி மாணவர்கள் தவிர)

  1. குறைந்தது 4 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.
  2. படைப்புகள் வேறு எங்கும் பகிர்ந்ததாகவோ, அச்சிடப்பட்டதாகவோ இல்லாமல் தமிழ்க்குடிலின் போட்டிக்கென எழுதி அனுப்பவேண்டும்.
  1. உங்கள் பார்வையில் நீங்கள் திரு.காமராசரை உணர்ந்த விதத்தில், இன்றைய கல்விச்சூழலை அவர் எப்படி கையாண்டு இருப்பார் எனக் கட்டுரைகள் படைக்கவேண்டுகிறோம்.
  1. படைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை

மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்கப்படவேண்டும் குழுமத்திலோ, நிருவாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.

  1. படைப்புகளை இலதா, பாமினி ஒருங்குகுறியில் தட்டச்சிட்டு சொல்(வேர்டு) ஆவணமாகஅனுப்பவேண்டுகிறோம். தங்கள் படைப்புகள் எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.

முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும் வலைப்பூவிலும் பகிரப்படும்.

பரிசு விவரம்:

முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு, வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலச்சினை(சின்னம்-Logo) பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னம் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டி எண் : 2 – தமிழ்க்கடல் திரு. மறைமலை அடிகளாரின் 140ஆவது பிறந்தநாளை முன்னிட்டுக்  கவிதைப்போட்டி

தலைப்பு : பொதுவான தலைப்பு இல்லை – விருப்பமான, பொருத்தமான தலைப்பில்…

விதிமுறைகள் :

  1. போட்டியில் பங்குகொள்பவர்கள் தங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதையைத்தங்கள் சொந்தக்குரலில் ஒலிப்பதிவு செய்து  (MP3 Format ) தமிழ்க்குடில் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறோம்.
  1. ஒலிப்பதிவு செய்யும்பொழுது தங்களைப்பற்றிய எந்தத் தன் விவரமும்கொடுக்காமல் கவிதையின் தலைப்பு, கவிதை, கவிதைக்கான களம், கவிதையின் சூழல்மற்றும் கவிதை என்ன சொல்கிறது என்னபனவற்றைக் குறிப்பிடவும்.
  1. மின்னஞ்சலில் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரி இவற்றோடு தாங்கள் பதிவுசெய்த கவிதையினைத் தட்டச்சிட்டு மின்னஞ்சலில் அனுப்பிட வேண்டுகிறோம்.

பரிசு விவரம்:

முதல் பரிசு மற்றும் இரண்டாவது பரிசு: வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலச்சினை(சின்னம்-Logo) பொறிக்கப்பட்ட  நினைவுச்சின்னமும், சான்றிதழும் வழங்கப்படும்.

மூன்றாவது பரிசு : நூலும், சான்றிதழும் வழங்கப்படும்.

அனுப்பவேண்டிய மின்னஞ்சல் – tamilkkudil@gmail.com <tamilkkudil@gmail.com>

அனுப்பவேண்டிய கடைசி நாள்:  கட்டுரைக்கு…. ஆடி 31, 2047 / 15.08.16

கவிதைக்கு…..ஆடி 26, 2047 / 10.08.16

தொடர்ந்து தமிழ் தொடர்பான போட்டிகளை அறிவித்து அதை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இந்தப் போட்டிகளும் சிறப்புற அனைவரும் கலந்து கொள்ளுங்கள். தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொண்டு அவர்களையும் எழுதச் சொல்லுங்கள்