தமிழில் பிறமொழிக் கலப்பு 3/4 – மறைமலை அடிகள்

தமிழில் பிறமொழிக் கலப்பு 3/4 (தமிழில் பிறமொழிக் கலப்பு 2/4 தொடர்ச்சி) இங்ஙனஞ் செய்தல் இறந்துபோன வடசொற்களை முற்றுமே அங்ஙனம் விடாமற், சில பல சொற்களையேனும் உலக வழக்கிற் பயிலவிடுதற்கு வழியாய் இருத்தலின் அது குற்றமாய்க் கொள்ளப்படுதலாகா தெனின்; இறந்துபோன வடமொழியின் சில சொற்களை உயிர்ப்பிக்கின்றேன் என்று புகுந்து பல நூறாயிரம் மக்களுக்குப் பயன்பட்டு வழங்கி இறக்கச் செய்தல் எள்ளளவும் பொருந்தாது. கையிலுள்ள பெருந்தொகைப் பொருளைக் கடலிற் கொண்டுபோய் எறிந்துவிட்டு, நிலத்தை அகழ்ந்து அடியிலுள்ள பொருள்களை எடுக்க முயல்வார் திறத்திற்குந், தமிழ்ச் சொற்களைக் கைந்நெகிழ…

தமிழில் பிறமொழிக் கலப்பு 2/4 – மறைமலை அடிகள்

தமிழில் பிறமொழிக் கலப்பு 2/4 (தமிழில் பிறமொழிக் கலப்பு ¼ தொடர்ச்சி) அங்ஙனமாயின், வேற்று நாட்டுச் சொற்கள் தமிழிற் கலந்தது போலவே, தமிழ்ச் சொற்களும் மற்றைத் தேயமொழிகளிற் கலந்து காணப்படுதல் வேண்டுமேயெனின்; ஆம், தமிழ்ச்சொற்கள் பல பழைய மொழிகளிலுங் கலந்து வழங்கவேபடுகின்றனவென்று கடைப்பிடிக்க. ஆணி மீனம் நீர் தாமரை கலை குடம் முதலான பலசொற்கள் ஆரிய மொழியிலும், அசை அருவி இரும்பு ஈன எல்லாம் மென்மை முகில் முதலான பல சொற்கள் ஆங்கிலம் இலத்தீன் கிரேக்கு முதலான ஐரோப்பியர் மொழிகளிலும், அவா இரு ஊர்…

தமிழ்க்குடில் அறக்கட்டளை கவிதை, கட்டுரை, பெண்களுக்கான போட்டிகள்

: தமிழ்க்குடில் அறக்கட்டளை போட்டிகள்   ஒவ்வொரு வருடமும் தமிழ்க்குடில் அறக்கட்டளை கவிதை, கட்டுரை மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடத்துவது தாங்கள் அறிந்ததே. இந்த வருடத்திற்கான போட்டிகளின் விவரங்கள் கீழே: போட்டி எண் 1 திரு. காமராசர் அவர்களின் 113 ஆவது பிறந்த நாளை முன்னிட்டுத் தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் மூன்றாம் ஆண்டு கட்டுரைப்போட்டி தலைப்பு : ‘இன்றைய நெருக்கடியான கல்விச்சூழலில் காமராசர்’ விதிமுறைகள்: போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம். (பள்ளி மாணவர்கள் தவிர) குறைந்தது 4 பக்கம் முதல்…

மறைந்த தலைவர்களின் ஈகங்களைச் சொல்ல வேண்டியது நம் கடமை – கவிஞர் முருகேசு

  மறைந்த தலைவர்களின்  ஈகங்களை இளைய தலைமுறையினரிடம் சொல்ல வேண்டியது நம் கடமை – கவிஞர் முருகேசு  காமராசர், மறைமலையடிகள் பிறந்த நாள் விழாவில்                    நூலக வாசகர் வட்டத் தலைவர் பேச்சு வந்தவாசி : வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின்  நூலக வாசகர் வட்டம் சார்பில்  ஆடி 01, 2047 / சூலை 16 இல்நடைபெற்ற கருமவீரர் காமராசர், தமிழறிஞர் மறைமலையடிகள் ஆகியோரின் பிறந்த நாள் விழாவில், மறைந்த நம் தலைவர்களின் ஈகங்களையும், மொழிப் பற்றையும் இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் சொல்ல வேண்டியது…

வேதங்களை உருப்போட்ட பின் வாயில் இருந்து இரத்தம் இரத்தமாக வரும்

வேதங்களை  உருப்போட்ட பின் வாயில் இருந்து இரத்தம் இரத்தமாக வரும்   இளமையில் நான் வேதங்களை உருப்போட்டது உண்டு. உருப்போட்ட பின் வாயில் இருந்து இரத்தம் இரத்தமாக வரும். இப்படி இரத்தம் வருவதற்கு மூலகாரணம் என்ன என்று மருத்துவர் பலரைக் கேட்டேன்………….   ஒரு மருத்துவர் என்னைக் காலையில் ஓதுகின்ற உபநிடதத்தையும், வேதங்களையும் 15 நாட்கள் வரை நிறுத்தி வைக்கச் சொன்னார். உபநிடத்தையும், வேதத்தையும் நிறுத்தி வைத்துத் தமிழையே ஓதினேன். அப்பொழுது இரத்தம் வரவில்லை. அன்றிலிருந்து சமற்கிருதம் ‘இரத்த மொழி’ என்று முடிசெய்தேன். தமிழுக்கும்…

ஆரியர் இந்தியா வந்தபின்பே தமிழரைப் பார்த்து எழுதினர்

ஆரியர் இந்தியா வந்தபின்பே தமிழரைப் பார்த்து எழுதினர்   ஆரியர் இந்தியாவிற் புகுந்த பின் தமிழர் உடைய நாகரிக அவர் தாங்கருதிய பொருளை எழுத்திலிட்டுப் பொறித்தலுங் கண்டு தாமும் தம்முடைய பாட்டுக்களைப் பண் அடைவுபட வகுத்தஞான்று எழுதுமுறை கண்டறிந்தார். இது  என்னும் பண்டிதர் விளக்குமாற்றானும் நன்கு அறியப்படும். – தமிழ்க் கடல் மறைமலையடிகள்  

ஆரியர்களுக்கு இலக்கிய இலக்கணம் தெரியாது!

ஆரியர்களுக்கு இலக்கிய இலக்கணம் தெரியாது!   ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன்முதலில் இலக்கியம், இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது. (எழுத்துக்களை வகைப்படுத்தியவர்கள் தமிழர்களே.)  மறைமலை அடிகள் : தமிழின் தனிச்சிறப்பு  

மும்மணி யாண்டுகள்: மொழிப்போர் பொன்விழா, தமிழியக்க நூற்றாண்டு விழா, காங்கிரசு துரத்தப்பட்ட பொன்விழா

       தனித்தமிழ் இயக்கம், மொழிப்போர்கள் இவற்றால் நாம் தொடக்கத்தில் வெற்றியை ஈட்டியுள்ளோம். எனினும் வெற்றிக்கனியைச் சுவைக்கும் முன்னரே தோல்விப்பாதையில் சறுக்கி விட்டோம். வீண் பேச்சையும் வெட்டிப்பேச்சையும் கேட்டு மயங்கும் நாம் செயற்பாட்டாளர்களைப் போற்றுவதில்லை. தமிழுக்காக வாழ்ந்த, வாழும் அறிஞர்களையும் தமிழ்காக்கத் தம் இன்னுயிர் நீத்தவர்களையும் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. இவற்றை மாற்றுவதற்கு இவ்வாண்டு முதலான மூன்றுஆண்டுகளும் நாம் ஒல்லும் வகையெலாம் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.  தமிழ்காக்கும் மொழிப்போர் 1937 இலிலேயே தொடங்கிவிட்டது. எனினும் 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மொழிப்போர் ஆட்சியையே…