உழவர்கள்மனிதச்சங்கிலி, தில்லி ூ akara 123_dilliyilmanithachangili_gnana

தமிழ்நாட்டு உழவர்கள் தில்லியில் மனிதச் சங்கிலிப் போராட்டம்!

  காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் தமிழ்நாட்டு உழவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும், வேளாண் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், இந்திய எரிவளி ஆணைய (GAIL) நிறுவனம் சார்பில் தமிழகத்தில் எரிவளிக் குழாய் பதிக்கும் திட்டத்தை நடுவண் அரசு தடுத்து நிறுத்த வேண்டும் முதலான கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழக உழவர்கள் சங்க ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தில்லியில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

  இதன் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, மதுரை, தேனி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் முதலான பல்வேறு இடங்களில் இருந்து வேளாண் பெருமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

படம்: நன்றி தமிழ் முரசு.

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - peyar_name_e.bhu.gnanaprakasan02