தமிழ்மொழி பேசும் உலக உறவுகளே! நீங்களே சொல்லுங்களேன்?
தமிழ் இனத்தின் தாய் – ஓர் உகத்தின் தாய், ஏன் தனிச்சிங்கள பெளத்த பேரினவாதியின் கால்களில் விழ வேண்டும்? அவன் சப்பாத்து கால்களுக்குள் ஏன் முகம் புதைத்து தன் குறைகள் சொல்லி அழ வேண்டும்?
இந்த ஒளிப்படத்தில் உள்ள சக்தியற்ற-பயனற்றவர்களால் தானே எமது இனத்துக்கு இந்த இழுக்கு! வெட்கம்! கேடு! அவமானம்! பழிப்புரை(சாபம்) எல்லாம்! எல்லாமே! ஒளிப்படத்தை நன்றே அவதானியுங்கள்.
ஈழத்தாயவள், சிங்களக் கொலைவெறி வண்கணாரின்(பாசிட்டுகளின் கால்களில் விழ முன்னே, பதறி ஓடோடிச்சென்று கைத்தாங்கலாகத் தூக்கி தாங்கிப்பிடித்துத் தேற்றாமல், நிகழ்கால நீலன் திருச்செல்வம் வேடிக்கை பார்க்கிறார்.
சோகை.மாவை, தான் ஏதோ வேறொரு உலகத்தில் இருப்பது போல, வெள்ளி பார்க்கிறார்!
‘என்ன செய்யப்போகிறோம் இதற்காக? என்ன செய்யப்போகிறோம் இதற்காக?’ என்று எமது இயலாமைகள்-ஆற்றாமைகளை வெளிப்படுத்தி புலம்பித்தவிப்பதை விடவும், ‘என்ன செய்யலாம் இதற்காக? என்ன செய்யலாம் இதற்காக?’ என்று நாம் எல்லோரும் கூட்டாகச் சிந்திப்போமாகவிருந்தால்,
கட்டியிருக்கிற கோவணத்தையும்-கச்சைகளையுமாவது உருவ விடாமல் பார்த்துக்கொள்ளலாம் அல்லவா!
-அ.ஈழம் சேகுவேரா-
இலங்கை, முல்லைத்தீவிலிருந்து.
தரவு : புரட்சி வெல்க! ஈழம் மலர்க!
Leave a Reply