‘தமிழ் இலக்கிய வழி’ மின் இதழுக்கு உங்கள் பதிவுகளை அனுப்பலாம்!
‘தமிழ் இலக்கிய வழி’ மின் இதழுக்கு உங்கள் பதிவுகளை அனுப்பலாம்!
வலையுலகத் தமிழ் வாசகர்களே! படைப்பாளிகளே!
எமது அன்றாடக் கருத்துப் பரிமாறலாக முகநூல் (Facebook) இருந்தாலும் உங்கள் பதிவுகளைத் தொகுத்துப் பரிமாற வலைப்பூ(Blog), வலைப்பக்கம்(Web), கருத்துக்களம்(Forum) ஆகியன அமைந்தாலும் மின்நூல்களும்(eBooks) மின்இதழ்களும்(eZines) இன்னொரு சூழலில் முதன்மை பெறுகிறது. அஃதாவது, மின்ஆவணமாகக் (eDocument) கணிணியில் சேமித்து வைத்து விரும்பிய வேளை படிக்க முடிகிறது. இவற்றை மின்நூலகங்களில்(eLibrary) பேணிப் பகிருவதால் அதிக வாசகர்களுக்குச் சென்றடைய வாய்ப்பும் உண்டும்.
இதனடிப்படையிலேயே நாம் ‘தமிழ் இலக்கிய வழி’ எனும் காலாண்டுக்கான மின் இதழ் ஒன்றை விரைவில் வெளியிட உள்ளோம். இம்முயற்சிக்குக் கிடைக்கும் தங்கள் ஆதரவைக் கருத்திற்கொண்டு, பின்னர் இதனை இரண்டு மாதத்துக்கு ஒன்றாக வெளியிடவும் எண்ணியுள்ளோம். எனவே ‘தமிழ் இலக்கிய வழி’ எனும் மின் இதழ் எவ்வாறான உங்கள் பதிவுகளை உள்வாங்கும் என்பதனை அறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
https://app.box.com/s/b08rmrgzmkmjb924vuzb0bsua6gvzkua
உங்கள் பதிவுகளை எமது ‘தமிழ் இலக்கிய வழி’ எனும் மின் இதழுக்கு அனுப்பி உதவுங்கள். அதன் மூலமும் வலையுலகத் தமிழ் வாசகர்கள் மத்தியில் உங்களை அடையாளப்படுத்த முடியும். அதேவேளை வலையுலகத் தமிழ் வாசகர்கள் ஊடாக உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு நீங்களும் உங்கள் வழிகாட்டல் பணியைச் செய்ய முடியும். எனவே, எமது தமிழ் இலக்கிய வழி 01 இற்கான பதிவுகளை 20/12/2017 புதன் இற்கு முன்னதாக அனுப்பி உதவுங்கள். மேலதிகத் தகவலைப் பெற மேற்காணும் இணைப்பைச் சொடுக்கி எமது வழிகாட்டலைப் பின்பற்றவும்
மூலம்: http://www.ypvnpubs.com/2017/10/blog-post_10.html
அன்புடன்
யாழ்பாவாணன்
Leave a Reply